மக்களே எச்சரிக்கை.. ஆன்லைனில் பெண்கள் மூலம் பணம் பறிக்கும் கும்பல் – போலீஸ் அதிரடி ஆக்சன்!

0
மக்களே எச்சரிக்கை.. ஆன்லைனில் பெண்கள் மூலம் பணம் பறிக்கும் கும்பல் - போலீஸ் அதிரடி ஆக்சன்!

தொலைபேசி செயலி மூலம் பெண்களை பேச வைத்து வழிப்பறி செய்த பெண் உட்பட நான்கு பேர்களை காவல்துறை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வழிப்பறி கும்பல் கைது:

தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொலை, கொள்ளை தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில் மக்களை எப்படி ஏமாற்றலாம் என்று சில கும்பல்கள்  பலவிதமாக யோசித்து செயல்படுகின்றனர். இதில் குறிப்பாக தொலைபேசியின் மூலம் தான் பல தவறுகள் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கிரைண்டர் என்ற மொபைல் செயலி மூலம் ஒரு கும்பல் பெண்களை விட்டு ஆண்களிடம் பேசி ஏமாற்றியுள்ளனர். அந்த கும்பல் சமீபத்தில் கோயம்புத்தூர் சேர்ந்த வாலிபரை ஏமாற்றியுள்ளனர். அவர் கொடுத்த புகாரின் பேரில் அந்த கும்பலை போலீஸ் கைது செய்துள்ளது.

அதாவது, கோயம்புத்தூர் சேர்ந்த பிரவீன் என்ற நபரை கிரைண்டர் செயலியை பயன்படுத்தி ஒரு பெண் ஆபாசமாக பேசி அவரை சூலூர் நாயமநாயக்கன் என்ற பகுதிக்கு வரவழைத்துள்ளனர். அந்த பெண் மீது உள்ள மோகத்தால் எதையும் பாராமல் அந்த பெண்ணை பார்க்க சென்றுள்ளார் அந்த வாலிபர். அங்கு அந்த பெண்மணியோடு சேர்ந்து நான்கு பேர் இருந்துள்ளனர். இந்நிலையில் அவரிடம் இருந்த பணத்தையும், வாகனத்தையும் வழிப்பறி செய்துள்ளனர். இது குறித்து போலீஸ் விசாரணை மேற்கொண்டு அந்த கும்பலை கைது செய்துள்ளனர். இதனால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்  என்று காவல்துறை அறிவுறுத்தியுள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here