பிரபல கார் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு – 4000 பேர் தமிழகத்தில் வேலையிழக்கும் அபாயம்!!

0
பிரபல கார் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு - 4000 பேர் தமிழகத்தில் வேலையிழக்கும் அபாயம்!!
பிரபல கார் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு - 4000 பேர் தமிழகத்தில் வேலையிழக்கும் அபாயம்!!

பிரபல Ford கார் நிறுவனம் தங்களுடைய கார் உற்பத்தியை இந்தியாவில் நிறுத்த போவதாக அறிவித்துள்ளதை அடுத்து அங்கு பணிபுரியும் 4000 பணியாளர்கள் நிலை கேள்விக்குறியாக உள்ளது.

உற்பத்தி நிறுத்தம்:

அமெரிக்காவை சேர்ந்த பிரபல கார் நிறுவனம் Ford என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இந்த நிறுவனம் இந்தியாவில் தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் கடந்து விட்டது. இந்தியாவில் விற்கப்படும் கார்களில் 2 சதவீதத்துக்கும் கீழான விற்பனையை மட்டுமே Ford நிறுவனம் வைத்திருக்கிறது. ஆரம்பிக்கப்பட்டு இவ்வளவு ஆண்டுகள் ஆகியும் இந்த நிறுவனத்தால் இங்கு பிரபலமடைய முடியவில்லை. Ford நிறுவனத்தின் ஸ்போர்ட் மாடல் தவிர வேறு எந்த மாடலும் குறிப்பிட்ட வளர்ச்சி அடைய வில்லை.

பிரபல கார் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு - 4000 பேர் தமிழகத்தில் வேலையிழக்கும் அபாயம்!!
பிரபல கார் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு – 4000 பேர் தமிழகத்தில் வேலையிழக்கும் அபாயம்!!

இந்த நிலையில், இந்த நிறுவனத்துக்கு இந்தியாவில் இரு பெரிய ஆலைகள் உள்ளன. அதில், தமிழ்நாட்டில் சென்னையை அடுத்த மறைமலைநகரில் ஓர் ஆலையும், குஜராத்தில் சனந்தில் ஓர் ஆலையும் உள்ளது குறிப்பிடத் தகுந்தது. இரு ஆலைகளையும் சேர்ந்து ஆண்டுக்கு 4.4 லட்சம் வாகனங்கள் தயாரிக்க முடியும் என்பது நிறுவனத்தின் அதிகபட்ச இலக்காக கருதப்பட்டது. ஆனால் ஜனவரி மாத விற்பனை சுமார் 4,000 வாகனங்கள் என்னும் அளவிலேயும், ஜூன் மாதத்தில் 2,800 வாகனங்கள் என்ற அளவில் மட்டுமே உள்ளது.

பிரபல கார் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு - 4000 பேர் தமிழகத்தில் வேலையிழக்கும் அபாயம்!!
பிரபல கார் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு – 4000 பேர் தமிழகத்தில் வேலையிழக்கும் அபாயம்!!

இந்த நிலையில், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தால் கூட முழு உற்பத்தி திறனை Ford நிறுவனத்தால் எட்ட முடியவில்லை. இதனால் இந்தியாவில் இந்த நிறுவனத்தை இழுத்து மூட Ford நிறுவனம் தயாராகி விட்டதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த நிறுவனத்தின் அறிவிப்பால், சென்னையில் இந்த நிறுவனத்தில் பணிபுரிந்த 4000 பணியாளர்களின் நிலை என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது. பிரபல நிறுவனத்தின் இந்த அறிவிப்பால் இங்கு பணிபுரியும் நபர்கள் மிகுந்த கலக்கத்தில் உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here