மதுரை வாழ் மக்களே., சித்திரை திருவிழாவில் அன்னதானம், பிரசாதம் வழங்க கூடாது., பதிலடி கொடுத்த நீதிபதி!!!

0
மதுரை வாழ் மக்களே., சித்திரை திருவிழாவில் அன்னதானம், பிரசாதம் வழங்க கூடாது., பதிலடி கொடுத்த நீதிபதி!!!
மதுரை வாழ் மக்களே., சித்திரை திருவிழாவில் அன்னதானம், பிரசாதம் வழங்க கூடாது., பதிலடி கொடுத்த நீதிபதி!!!

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இத்திருவிழாவின் திருக்கல்யாணம், தேரோட்டம் மற்றும் கள்ளழகர் வைகையில் எழுந்தருளல் போன்ற சிகர நிகழ்ச்சிகளில் உள்ளூர் மட்டுமல்லாமல் வெளிமாநிலங்களிலிருந்தும் எக்கச்சக்கமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இவர்கள் பசியின்றி விழாவை சிறப்பிக்க, மதுரை வாழ் மக்கள் அன்னதானம், பிரசாதம், மோர் என பல உணவுப் பொருட்களை இலவசமாக பக்தர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கி வருகின்றனர். இந்நிலையில் பக்தர்கள் பாதுகாப்பு கருதி உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்தவர்கள் மட்டுமே அன்னதானம், பிரசாதம் போன்ற உணவு பொருட்களை வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

பள்ளி மாணவர்களுக்கு அரசு ஏற்பாடு செய்த சூப்பர் அப்டேட்…, கோடை விடுமுறையிலும் இத பயன்படுத்திக்கலாமா??

இந்த உத்தரவை எதிர்த்து மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள், “5 லட்சம் மக்கள் கூடும் திருவிழாவில் உடனடியாக இந்த உத்தரவை செயல்படுத்துவது என்பது சாத்தியமில்லாதது. அடுத்த ஆண்டில் போதிய கால அவகாசம் வழங்கி செயல்படுத்த திட்டமிடுங்கள். இந்த ஆண்டு மாவட்ட ஆட்சியரின் உத்தரவை அமல்படுத்த வேண்டாம்.” என உத்தரவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here