உணவு பிரியர்களுக்கு ஸ்பெஷல் “தங்க தோசை”.,, அதோட விலையை கேட்டா ஷாக் ஆயிருவீங்க!!

0
உணவு பிரியர்களுக்கு ஸ்பெஷல்
உணவு பிரியர்களுக்கு ஸ்பெஷல் "தங்க தோசை".,, அதோட விலையை கேட்டா ஷாக் ஆயிருவீங்க!!

தோசை பிரியர்களுக்காக “தங்க தோசை”அறிமுகம் செய்யப்பட்டு, 1001 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது குறித்த முழு விவரத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

தங்க தோசை:

இட்லி பிரியர்களை விட , தோசை பிரியர்கள் தான் ஏராளம். அவர்கள் நாக்குக்கு விருந்தளிக்கும் விதமாக சாதா தோசை, நெய் தோசை ,மசால் தோசை, கல் தோசை, கொத்தமல்லி தோசை, புதினா தோசை என்று தோசையில் பல வகைகள் உள்ளன.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இருப்பினும் தற்போது புது வகையாக “கோல்டன் பாயில் எடிபல் மசால் தோசை என்று அழைக்கப்படும் தங்க மசால் தோசை” அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. மேலும் இந்த தோசைக்கு ஏகபோக வரவேற்பு கிடைத்து வருவதாக தகவல்கள் கூறுகிறது.

வீரியம் எடுக்கும் ஆப்ரிக்க பன்றிக் காய்ச்சல்.., 276 பன்றிகளை எரிக்க மாநில அரசு முடிவு!!

அதாவது கர்நாடக மாநிலம் துமகூரு பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் வாடிகையாளர்களை கவரும் வன்ணம் இந்த தங்க தோசை விற்பனை செய்யப்படுகிறது. இந்த தோசையின் விலை ரூ. 1,001 ரூபாய் ஆகும். மேலும் அதிக விலையையும் பொருட்படுத்தாமல் தோசை பிரியர்கள் இந்த தங்க முலாம் பூசப்பட்ட தோசையை வாங்கி சாப்பிட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இந்த தோசை ஊற்றப்பட்டு சூடாக இருக்கும் நிலையில் 24 காரட் தங்க முலாம் பூசப்பட்ட மெல்லிய தாள் அதன் மீது வைக்கப்பட்டு தயாரிக்கப்படுவதாக ஹோட்டல் ஊழியர்கள் கூறுகின்றனர். மேலும் நாள்தோறும் 20 தோசைகள் விற்கப்படுவதாகவும் கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here