நாட்டுப்புற கலைஞர்களா நீங்கள்.., தமிழக அரசு நடத்தும் நம்ம ஊர் திருவிழா.., பங்கேற்க விரும்பும் போட்டியாளர்கள் இத செய்யுங்க!!

0
நாட்டுப்புற கலைஞர்களா நீங்கள்.., தமிழக அரசு நடத்தும் நம்ம ஊர் திருவிழா.., பங்கேற்க விரும்பும் போட்டியாளர்கள் இத செய்யுங்க!!
நாட்டுப்புற கலைஞர்களா நீங்கள்.., தமிழக அரசு நடத்தும் நம்ம ஊர் திருவிழா.., பங்கேற்க விரும்பும் போட்டியாளர்கள் இத செய்யுங்க!!

நாட்டுப்புற கலைகளின் சிறப்புகளை இளம் தலைமுறையினர் அறிந்து கொள்வதற்கு அரசாங்கம் எடுத்த புதிய நடவடிக்கை தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

நாட்டுப்புற கலைகள்:

தற்போதைய டிஜிட்டல் உலகத்தில் வாழும் இளைஞர்கள் பல கலைத் திறமைகளை தன்னோடு அடக்கி வைத்துக் கொண்டு வெளியே காட்டாமல் இருந்து வருகின்றனர். குறிப்பாக நாட்டுப்புற கலைகளை கற்ற கலைஞர்கள், வெளி காட்டினால் எங்கு மற்றவர்கள் அசிங்கப்படுத்தி விடுவார்கள் என்று தங்கள் திறமைகளை வெளி காட்டாமல் இருந்து வருகின்றனர். இதனால் இளம் தலைமுறையினர்- களுக்கு நாட்டுப்புற கலைகளைப் பற்றி தெரியாமல் போய்விடுகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அவர்களுக்கு நாட்டுப்புற கலைகள் பற்றி அறிந்து கொள்ளும் விதமாகவும், கலைஞர்களுக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கும் விதமாகவும் சென்னையில் “நம்ம ஊர் திருவிழா” என்ற பெயரில் தமிழக அரசு கலை பண்பாட்டுத் துறையால் நடத்தப்பட இருக்கிறது. இதில் கலந்து கொள்ள விரும்பும் நாட்டுப்புற கலைஞர்கள் தங்கள் திறமைகளை ஐந்து நிமிட வீடியோவாக பதிவு செய்து கலை பண்பாட்டுத் துறை அலுவலர்களுக்கு தங்களின் விவரங்களுடன் சேர்த்து வீடியோவை தபாலில் அனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.

துணிவு vs வாரிசு., ஒரே நாள் ரிலீசில் சிக்கலா? ரசிகர்களின் 8 ஆண்டு எதிர்பார்ப்பில் ஏமாற்றம்!!

மேலும் இதில் கலந்து கொள்பவர்களுக்கு சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். அதாவது இந்த ஐந்து நிமிட வீடியோவை வருகிற டிசம்பர் 13-ஆம் தேதி கலைப் பண்பாட்டுத் துறை மண்டல உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு தபாலில் அனுப்ப வேண்டும். மேலும் ஒரு குழுவில் இடம்பெற்ற கலைஞர் வேறு எந்த குழுவிலும் இணைய கூடாது. இந்த விழாவில் நடக்கும் போட்டிகளில் தேர்வுக் குழுவின் முடிவே இறுதியானது என்று தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here