கொரோனா மீது கவணம் செலுத்தாமல் டெங்கு மீதும் கவனம் செலுத்துங்கள் – உயர்நீதிமன்றம் உத்தரவு!!!

0
கொரோனா மீது கவணம் செலுத்தாமல் டெங்கு மீதும் கவனம் செலுத்துங்கள் - உயர்நீதிமன்றம் உத்தரவு!!!
கொரோனா மீது கவணம் செலுத்தாமல் டெங்கு மீதும் கவனம் செலுத்துங்கள் - உயர்நீதிமன்றம் உத்தரவு!!!

கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் அரசு நோயை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையில் கொரோனாவுடன் சேர்ந்து டெங்கு நோயும் பரவி வருகிறது. இந்த நோயையும் கட்டுப்படுத்த வேண்டும். எனவே கொரோனா மீது முழு கவணம் செலுத்தாமல் டெங்கு நோயை தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி உயர்நீதிமன்றம் உத்தரவு.

டெங்கு நோய் மீதும் கவணம் தேவை…

கொரோனா 2வது அலையின் தாக்கம் அதிகளவில் இருந்தது. மக்கள் அனைவரும் உரிய மருத்துவ வசதிகள் மருந்துகள் மற்றும் அஃக்ஸிஜென் மற்றும் மருத்துவமனையில் படுக்கைகள் இல்லாமல் தவித்து வந்தனர். இந்நிலையில் அரசு பல முயற்சிகளை மேற்கொண்டும் வெளிநாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்து கொரோனா சிகிச்சைக்காக அனைத்து நடவடிக்கைகளை செய்தது. கொரோன 2வது அலை தாக்கமே இன்னும் முடியவில்லை ஆனால் 3வது அலை செப்டெம்பர் மாதம் வரப்போகிறது என்று இப்பொழுதே முன்னெச்சரிக்கைகளை எடுத்து வருகின்றது அரசு. இந்நிலையில் கொரோனா பரவல் இருக்கும் இவ்வேளையில் புதியதாக டெங்கு நோய் பரவல் பரவ தொடங்கிவிட்டது. தமிழகத்தில் 2008 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

டெங்கு நோய் மீதும் கவணம் தேவை...
டெங்கு நோய் மீதும் கவணம் தேவை…

இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் டெங்கு பரவல் அதிகம் உள்ளது. இதனை தொடர்ந்து வழக்கறிஞர் சூரியபிரகாசம் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக வழக்கு ஒன்றை சென்னை உய்ரநீதிமன்றத்தில் தொடர்ந்தார், அந்த வழக்கு இன்று நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்னிலையில் நடைபெற்றது. டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் பற்றி விசாரித்தனர். பின் கொரோனா நோய் பரவல் மீது முழு கவணம் செலுத்தாமல் டெங்கு நோய் பரவாமலும் அதற்கான நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும். பின் கொரோனா 2வது அலை கட்டுக்குள் வார்ப்பது குறித்தும் டெங்கு பரவலை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றியும் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று மாநகராட்சிக்கு என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன் வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்குத் தள்ளிவைத்தனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here