கொரோனா நோயாளிகளுக்கு தரையில் படுக்க வைத்து சிகிச்சை – தொடரும் அவல நிலை!!

0

நாளுக்கு நாள் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அனைத்து பகுதி மருத்துவமனைகளிலும் படுக்கை வசதிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இதனால் பல வேதனைக்குரிய சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.

கொரோனா நோயாளிகள்:

இந்தியாவில் தமிழகம், கேரளா, புதுவை, மராட்டியம், கர்நாடக போன்ற மாநிலங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. இதற்காக பல வகை சிகிச்சை மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டும் கொரோனாவின் தாக்கம் குறைந்தபாடில்லை. அந்த வகையில் இன்று புதுவையில் புதிதாக 2007 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

மேலும் 27 பேர் தொற்றினால் உயிர் இழந்துள்ளனர். இதனால் புதுவையில் மொத்த பாதிப்பின் எண்ணிக்கை 77,031 ஆகவும் உயிரிழப்பு எண்ணிக்கை 1,045 ஆகவும் அதிகரித்துள்ளது. தொடர்ந்து கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருவதால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் குவிந்த வண்ணமாக உள்ளார்கள்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தடுப்பூசி செலுத்துவதற்கான இடைவெளி நீட்டிப்பு – மத்திய சுகாதாரத்துறை தகவல்!!

இதனால் தற்போது அங்குள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் படுக்கைகள் நிரம்பியுள்ளது. சில மருத்துவமனைகளில் இடைவெளி இன்றி படுக்கைகள் அமைக்கப்பட்டு வருகிறது. இருந்தும் நோயாளிகள் கூட்டம் அலைமோதி வருகிறது. இதன் எதிரொலியாக கொரோனா நோயாளிகளுக்கு தரையில் படுக்க வைத்தும், நாற்காலியில் உட்கார வைத்தும் சிகிச்சைகள் அளிக்கப்படும் அவல நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here