தொடரும் வெள்ளப்பெருக்கு.., அந்த அருவியில் 15வது நாட்களாக குளிக்க தடை.., சுற்றுலா பயணிகள் வருத்தம்!!

0
தொடரும் வெள்ளப்பெருக்கு.., அந்த அருவியில் 15வது நாட்களாக குளிக்க தடை.., சுற்றுலா பயணிகள் வருத்தம்!!
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே இருக்கும் பிரபல சுற்றுலா தலமான கும்பகரையில் தினசரி பெரும்பாலான மக்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக வெளி மாவட்டங்களில் இருந்து ஏகப்பட்ட மக்கள் வந்து செல்கின்றனர். இதனை தொடர்ந்து வடகிழக்கு பருவமழை ஆரம்பித்ததில் இருந்து தேனியில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் வனத்துறையினர் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, கடந்த சில நாட்களாக கும்பக்கரை அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக அப்பகுதியில் குளிக்க தடை செய்யப்பட்டுள்ள நிலையில் 15வது நாளாக வனத்துறையினர் குளிக்க தடை விதித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் சோகத்தில் இருந்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here