முகேஷ் அம்பானியை எதிர்க்கும் பிளிப்கார்ட் நிறுவனம்

0

முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் தனியார் குழுமத்தின் ஹாம்லெயஸ் உடன் நேரடியாக போட்டியிட தயாராகும் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட். ‘ஆர்’அஸ் மற்றும் பேபிஸ்’ஆர்’அஸ் ஆகிய பிராண்டுகளுடன் ஒப்பந்தம்.

பிளிப்கார்ட்:

இந்தியாவின் முன்னணி தொழிலதிபராக திகழ்பவர் தான், முகேஷ் அம்பானி. ரிலையன்ஸ் தனியார் குழுமத்தின் தலைவர் ஆவர். இந்தியாவில் உள்ள கோடீஸ்வரர்களில் இவரும் ஒருவர். 2019ஆம் ஆண்டுப் பொம்மைகள் விற்பனை நிறுவனமான Hamleys-வை சுமார் 620 கோடி ரூபாய்க்கு வாங்கி வெற்றிகரமாக இயங்கி வந்தது. தற்போது அதற்க்கு போட்டியாக களமிறங்குகிறது பிளிப்கார்ட் நிறுவனம்.

பிளிப்கார்ட் அதிரடி முடிவு

ஆன்லைன் சேவையில் பிளிப்கார்ட் நிறுவனத்திற்கு என வாடிக்கையாளர்கள் உள்ளனர். அமெரிக்காவின் முன்னணி பொம்மை மற்றும் குழந்தைகள் ஆடை விற்பனை நிறுவனமான டாய்ல் ‘ஆர்’அஸ் மற்றும் பேபிஸ்’ஆர்’அஸ் ஆகிய பிராண்டுகளைத் தனது ஈகாமர்ஸ் தளத்திற்குள் கொண்டு வர ஒப்பந்தம் செய்துள்ளது பிளிப்கார்ட் நிறுவனம்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

எனவே பொருட்கள் குறைவான விலையில் விற்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிளிப்கார்ட் நிறுவனத்தின் மொத்தவிலை விற்பனை பிரிவும், Ace Turtle என்னும் நிறுவனமும் இணைந்து புதிதாகக் கூட்டணி நிறுவனத்தை உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here