தமிழகத்தில் இந்த 5 ஹோட்டல்களில் தரமான உணவுகள் இல்லை – போக்குவரத்து துறை அமைச்சர் குற்றச்சாட்டு!!

0

தமிழகத்தில் உள்ள பிரபல 5 தனியார் விடுதிகளில் தரமான உணவுகள் வழங்கப்படுவது இல்லை என போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் குற்றம் சாட்டியுள்ளார்.

பகிரங்க குற்றச்சாட்டு:

சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பெரு நகரங்களுக்கு பயணம் செய்யும் பயணிகள் பெரும்பாலானோர் பேருந்து போக்குவரத்தை தேர்வு செய்கின்றனர். இது போன்ற அதிக தூரம் செல்லும் பேருந்துகள், உணவு இடைவேளைக்கு பிரபல ஓட்டல்கள் முன்னால் நிறுத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், பேருந்து நிறுத்தப்படும் ஒரு சில ஹோட்டல்கள் தரமற்ற உணவுகளை வழங்குவதாக அண்மையில் குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து தீவிரமாக விசாரித்து போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

 

அதன்படி, விக்கிரவாண்டி அருகே உள்ள அண்ணா, உதயா, வேல்ஸ், ஹில்டா மற்றும் அரிஸ்டோ ஆகிய 5 ஓட்டல்கள் முன்னால் இனி அரசுப் பேருந்துகளை நிறுத்த தடை விதிக்கப்படுவதாக தெரிவித்தார். இந்த, ஐந்து ஓட்டல்களிலும் தரமற்ற உணவுகள் விற்கப்படுவதாக, எழுந்த புகாரில் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சர் விளக்கமளித்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here