தமிழ்நாட்டில் மீன்பிடி தடைக்கால நிவாரணம்.. ரூ.89.50 கோடி நிதி ஒதுக்கிய முதல்வர் ..,அரசாணை வெளியீடு!!

0
தமிழ்நாட்டில் மீன்பிடி தடைக்கால நிவாரணம்.. ரூ.89.50 கோடி நிதி ஒதுக்கிய முதல்வர் ..,அரசாணை வெளியீடு!!
தமிழ்நாட்டில் மீன்பிடி தடைக்கால நிவாரணம்.. ரூ.89.50 கோடி நிதி ஒதுக்கிய முதல்வர் ..,அரசாணை வெளியீடு!!

தமிழ்நாட்டில் கடல் மீன் வளத்தை பேணி காப்பதற்காக வருடத்திற்கு 61 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம் அமல் படுத்தப்பட்டு வருகிறது. இந்த நாட்களில் மீன்பிடி விசைப் படகுகள் மற்றும் இழுவலைப்படகுகளில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் முற்றிலுமாக தொழிலின்றி வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதனால் மீனவர்கள் தங்களது குடும்பத்தினரை சிரமமின்றி நடத்திச் செல்ல கடந்த 2008ம் ஆண்டில் இருந்து மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்கப்படுகிறது. அவ்வகையில், இந்த ஆண்டு 14 கடலோர மாவட்டங்களை சேர்ந்த மீனவ குடும்பங்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரணமாக தலா 5000 ரூபாய் வழங்கப்படுகிறது.

டேய் புருஷா., உனக்கு இதுதான் கடைசி., வார்னிங் கொடுத்த மகாலட்சுமி., கதிகலங்கி போன ரவீந்தர்!!

இந்த திட்டத்திற்காக கிட்டத்தட்ட ரூ.89.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தின் மூலம் 1.79 லட்சம் மீனவ குடும்பங்கள் பயன் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசு நிதி ஒதுக்கியதை அடுத்து, மீன்பிடி தடைக்கால நிவாரண தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கும் பணி இன்று முதல் தொடங்குகிறது என்று தெரிவித்துள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here