தமிழகம், காரைக்கால் மீனவர்கள் சிறைபிடிப்பு – நீதிமன்றத்தில் முறையீடு!!

0

நேற்று எல்லையை மீறி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் தமிழகம் மற்றும் காரைக்கால் பகுதியை சேர்ந்த 54 மீனவர்களை கைது செய்தனர். தற்போது இதுகுறித்து நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

மீனவர்கள்:

கடந்த சில ஆண்டுகளாகவே இலங்கை மற்றும் தமிழகத்திற்கு இடையே கடல் எல்லை பகுதிகளில் பல பிரச்சனைகள் நிலவி வருகிறது. தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதியை சேர்ந்த மீனவர்களை எல்லை மீறியதாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து விடுகின்றனர். தற்போது இதேபோல் ஓர் சம்பவம் தான் அரங்கேரியுள்ளது. அதன்படி நேற்று தமிழகம் மற்றும் காரைக்கால் பகுதியை சேர்ந்த 54 மீனவர்களை 5 விசைப்படகுகளுடன் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனால் பரபரப்பு ஏற்படாது. இதற்கு பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்தனர். மேலும் இலங்கை அத்துமீறுவதாக பலரும் குற்றம் சாட்டி வந்தனர். தற்போது இந்த சம்பவம் குறித்து தமிழக முதல்வர் என்ன முடிவு செய்யவுள்ளார் என்று மக்களும் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Double Mutant கொரோனா தமிழகத்தில் பரவுகிறதா?? ராதாகிருஷ்ணன் விளக்கம்!!

இந்நிலையில் தற்போது இந்த சம்பவம் குறித்து உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை நாட்கள் என்பதால் இந்த வழக்கை விசாரணைக்காக வருகிற திங்கள் கிழமை நீதிமன்றம் எடுத்துக்கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதற்கு ஓர் நல்ல தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here