தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்ந்து வரும் நிலையில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகி உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (நவ.15) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக மன்னார் வளைகுடா பகுதியில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் நியூஸ்.., இனி இந்த பொருள் கிடைப்பதில் சிக்கல் வெளியான தகவல் !!!
எனவே மீன்பிடி தொழில் செய்யும் மீனவர்களின் பாதுகாப்பு நலன் கருதி மீன்வளத்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது ராமேஸ்வரத்தில் மண்டபம், பாம்பன், கீழக்கரை, சோழிய குடி, ஏா்வாடி, தொண்டி உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் உள்ள விசைப் படகு மீனவர்கள், நாட்டுப்படகு மீனவர்கள் மறு உத்தரவு வரும் வரை மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.