நாவூறும் சுவையுடன் “மீன் பொழிச்சது” – மிஸ் பண்ணாம செஞ்சு பாருங்க!!

0
fish polichathu
fish polichathu

மீன் பிரியர்கள் என்றால் அவர்கள் தனி ரகம் தான். அவர்களுக்கு என்று தனி ரசனை இருக்கும் என்று கூட கூறலாம். மீன் வகை உணவுகளில் மிகவும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் “வாழையிலை மீன் பொழிச்சது” ரெசிபி பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்..!!

தேவையான பொருட்கள்

மீனை ஊறவைக்க,
  • கட்லா மீன் – 2 சம அளவிலான துண்டுகள்
  • எலுமிச்சை சாறு – 1/2 டீஸ்பூன்
  • பூண்டு – 2 (பொடியாக நறுக்கியது)
  • மிளகு பொடி – 1 டீஸ்பூன்
  • மஞ்சள் பொடி – 1 டீஸ்பூன்
  • மிளகாய் பொடி – 1 டீஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
மசாலாவிற்கு தேவையான பொருட்கள்
  • பெரிய வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)
  • தக்காளி – 1
  • பூண்டு – 2 (பொடியாக நறுக்கியது)
  • பச்சை மிளகாய் – 2
  • கருவேப்பில்லை & கொத்தமல்லி – தேவையான அளவிற்கு
  • மஞ்சள் பொடி – 1/4 டீஸ்பூன்
  • மிளகாய் பொடி – 1/4 டீஸ்பூன்
  • கடுகு – 1 ஸ்பூன்
  • சீரகம் – 1 ஸ்பூன்
  • உளுந்தம் பருப்பு – 1 ஸ்பூன்
  • தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன்
  • வாழை இலை – 2

செய்முறை

முதலில், மீனை நன்றாக மற்றும் சுத்தமாக கழுவி எடுத்து கொள்ளவும். பின்பு, அத்துடன் மீனை ஊறவைக்க மேற்குறிய அனைத்து பொருட்களையும் கலந்து வைத்து கொள்ளவும். பின்பு, மீனை 15 நிமிடங்கள் தனியாக வைத்து விடவும். இது முடிந்ததும், கடாயினை காய வைத்து அதில் தேங்காய் எண்ணெய் சிறிதளவு விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் சீரகம் போட்டு தாளிக்கவும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

நன்றாக தாளித்ததும், அதில் வெங்காயம், தக்காளி, கருவேப்பில்லை, கொத்தமல்லி ஆகியவற்றை போட்டு வதக்கவும். இத்துடன் பூண்டையும் சேர்த்து வதக்கவும். வதக்கிய மசாலா கலவையினை தனியாக எடுத்து வைத்து கொள்ளவும். பின், ஒரு தட்டில் வாழை இலையினை எடுத்து வைத்து, அதில் முதலில் மசாலா வைக்கவும். அதன் மேல் ஊற வைத்துள்ள மீனை வைத்து, மீனின் மேல் மீண்டும் மசாலா கலவையினை வைக்கவும்.

சமைக்க சொன்னது ஒரு குத்தமா?? வீட்டையே ரெண்டாக்கிய மீனா! கோவத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்!!

Meen pollichathu (Fish Roasted in banana leaf)

பின்பு, வாழை இலையினை வைத்து மூடிவிடவும். இரு மீன்களையும் இவ்வாறாக வைத்து எடுத்து கொள்ளவும். பின்பு, ஒரு வானொலியை காய வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி வாழை இலையினை வைக்கவும். வாழை இலை நன்றாக பொன்னிறமாக வரும் வரை பொரித்து எடுத்து கொள்ளவும். சூடாக பரிமாறவும்!!

அவ்வளவு தான், யம்மியான “வாழை இலை மீன் பொழிச்சது” ரெடி!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here