கேரளாவில் வழக்கறிஞரான முதல் திருநங்கை.., சமூக வலைதளங்களில் குவியும் பாராட்டு!!!

0

ஆண்களுக்கு நிகராக அனைத்து துறைகளிலும் பெண்கள் சாதித்து வருகின்றனர். தற்போது இவர்களுக்கு நிகராக திருநங்கைகளும் பல துறைகளிலும் கால்பதித்து அசத்தி வருகின்றனர். அந்த வகையில் இப்போது கேரள மாநிலத்தை சேர்ந்த பத்மா லக்ஷ்மி முதல் திருநங்கை வழக்கறிஞராக பொறுப்பேற்றுள்ளார்.

இவர் எர்ணாகுளத்தில் உள்ள சட்டக் கல்லூரியில் தனது சட்டபடிப்பை முடித்து விட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை கேரளாவில் புதிய வழக்கறிஞர்கள் பதிவுக்கு விண்ணப்பித்துள்ளார். இந்த பதிவுக்கு 1500 பேர் விண்ணப்பித்ததில் இவரும் ஒருவராக பங்கேற்று இப்போது வழக்கறிஞராக பணியமர்த்தப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு பட்ஜெட் 2023-24: அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம் இடம்பெறாதது ஏன்?

இதனால் இவரை கௌரவிக்கும் விதமாக கேரள தொழில்துறை அமைச்சர் பி ராஜீவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்து பாராட்டியுள்ளார். மேலும் இந்த தகவல் இணையத்தில் வைரலாக பல்வேறு தரப்பில் இருந்தும் வழக்கறிஞர்கள் பத்மா லக்ஷ்மிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here