முதல் சந்திர கிரகணம் இந்தியாவில் பார்க்கலாம் – எங்கு எப்போது வாங்க தெரிஞ்சுக்கலாம்!!!

0

இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் 2021 மே 26ம் தேதி நிகழ இருக்கிறது. புத்த பூர்ணிமா கொண்டாடப்படக்கூடிய அற்புத நாளில் இந்த சந்திர கிரகணம் ஏற்படுகிறது.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

முதல் சந்திர கிரகணம் இந்தியாவில் பார்க்கலாம்:

இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் 2021 மே 26ம் தேதி நிகழ இருக்கிறது. புத்த பூர்ணிமா கொண்டாடப்படக்கூடிய அற்புத நாளில் இந்த சந்திர கிரகணம் ஏற்படுகிறது. ஏற்கனவே கொரோனா வாட்டி வதைத்து வருகின்றது. இந்த நிலையில் கிரகணத்தால் சில ராசிகள் பாதிப்படைகின்றன.

நிலவுக்கும், சூரியனுக்கும் இடையே பூமி வரும்போது; அது சந்திர கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டு இரண்டு சூரிய கிரகணங்களும், இரண்டு சந்திர கிரகணங்களும் நிகழவிருக்கின்றன. அதில் முதல் சந்திர கிரகணம் தற்போது நிகழவிருக்கிறது. இப்படி ஏற்படும் சந்திர கிரகணத்தை இந்தியாவில் சில பகுதியில் இருந்து பார்க்கலாம்.

அதாவது 26 மே அன்று  முழு கிரகணமாக நடக்கும் இந்த நிகழ்வு மதியம் 2.17 மணிக்கு தொடங்கி; இரவு 7.19 மணி வரை என 5 மணிநேரம் 2 நிமிடங்கள் வரை நீடிக்கிறது. இந்த காட்சியை சிக்கிம் தவிர்த்து வடகிழக்குப் பகுதிகள், மேற்கு வங்காளத்தின் சில பகுதிகள், ஒடிசாவின் சில கடற்கரைப் பகுதிகள் மற்றும் அந்தமான் நிகோபர் தீவுகளில் காணலாம். மேலும் தென்அமெரிக்கா, வடஅமெரிக்கா, ஆசியாவின் சில நாடுகள், ஆஸ்திரேலியா, பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் காணமுடியும். நாட்டின் கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் மட்டுமே தெரியும்.

Youtube  => Subscribe செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here