உலகிலேயே முதல் முறையாக 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி.. சாதித்து காட்டிய கியூபா!!

0
உலகிலேயே முதல் முறையாக இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணியை கியூபா தொடங்கியுள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கம் முதல் பரவிய இரண்டாம் அலை கொடிய பாதிப்பையும், அதிக உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியது. இந்நிலையில் விரைவில் மூன்றாம் அலை பரவல் தொடங்கும் என்றும், அது குழந்தைகளையே அதிகம் தாக்கும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
 பெண்ணுக்கு ஒரே நாளில் மூன்று டோஸ் தடுப்பூசி...
அதன்படியே சமீப காலங்களில் கொரோனாவால் குழந்தைகள் பாதிக்கப்படுவது அதிகரித்துள்ள நிலையில், மூடிக்கிடக்கும் பள்ளிகளையும் திறக்க வேண்டியிருப்பதால் குழந்தைகளுக்கும் தடுப்பூசி செலுத்துவது கட்டாயமாகிறது. இதனால் உலகின் பல நாடுகள் குழந்தைகளுக்கு தடுப்பசி செலுத்தி அவர்களை கொரோனாவிலிருந்து பாதுகாக்க தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் கியூபாவில் அக்டோபர், நவம்பரில் பள்ளிகள் படிப்படியாக திறக்கப்படும் என்றும், பள்ளி செல்லும் அனைத்து சிறுவர்களுக்கும் தடுப்பூசி போட்ட பின்னரே பள்ளிகள் திறக்கும் என என்று கியூபா அறிவித்துள்ளது. இதனால் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணியை அந்நாடு தொடங்கியுள்ளது. இதன் மூலம் உலகிலேயே 2 வயதுக்கு தடுப்பூசி போடும் முதல் நாடக கியூபா மாறியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here