சோதனையிலும் சாதனை படைத்த பழங்குடியின தமிழக பெண்.., ஸ்ரீபதிக்கு குவியும் பாராட்டுக்கள்!!!

0
சோதனையிலும் சாதனை படைத்த பழங்குடியின தமிழக பெண்.., ஸ்ரீபதிக்கு குவியும் பாராட்டுக்கள்!!!
இன்றைய காலகட்டத்தில் பெண்கள் பல துறைகளில் சாதித்து வருகின்றனர். இந்த சாதனையை அடைவதற்கு முன் அவர்களுக்கு எத்தனையோ தடைகள் வருகிறது. ஆனால் எதையுமே பொருட்படுத்தாமல் லட்சியத்தை மட்டும் குறிக்கோளாக வைத்துள்ளனர். அந்த வகையில் தனக்கு வந்த துன்பங்களை கடந்து இன்று சாதித்துக் காட்டிய தமிழக பழங்குடியின கிராமத்தைச் சேர்ந்த பெண் ஸ்ரீபதியை இன்று பலரும் பாராட்டி வருகின்றனர். அதாவது 23 வயதான இவர் BA.BL சட்டப்படிப்பு படித்து கொண்டிருக்கும் போது திருமணம் நடைபெற்றது. ஆனாலும் ஸ்ரீபதி தன் கணவர் உதவியுடன் தொடர்ந்து படிப்பை மேற்கொண்டார். இந்நிலையில் இவருக்கு முதல் குழந்தை பிறந்து இரண்டாவது கருவுற்றிருக்கும் போது TNPSC சிவில் நீதிபதி தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது. இதில் என்ன சோகமான விஷயம் என்றால் ஸ்ரீபதியின் பிரசவ தேதியும். தேர்வு தேதியும் ஒரே நாளில் வந்ததுதான்.
ஆனாலும் மனம் தளராத ஸ்ரீ பதிக்கு அதிர்ஷ்டவசமாக தேர்வுக்கு முதல் நாளே குழந்தை பிறந்தது. இந்த வலிகளையும் தாண்டி குழந்தை பிறந்து இரண்டாவது நாளில் தன்னுடைய லட்சியத்தில் சாதிக்க வேண்டும் என தன் கணவர் உதவியுடன் சென்னைக்கு வந்து சிவில் தேர்வை வெற்றிகரமாக எழுதி முடித்தார். அதன் பின் தேர்வு முடிவுகள் என்னாகுமோ என பயந்து கொண்டிருந்த ஸ்ரீபதி சிவில் தேர்வில் வெற்றி பெற்றார். இது தவிர இந்த வெற்றியின் மூலம் தமிழ்நாட்டின் முதல் பழங்குடியின பெண் சிவில் நீதிபதியாகவும் தேர்வாகியுள்ளார். இந்நிலையில் இவர் நீதிபதிக்கான ஆறு மாத பயிற்சிக்குப் பிறகு பணியமர்த்தப்படுவார் என கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here