மக்கள் விமர்சையாக கொண்டாடும் பண்டிகைகளில் முக்கியமான ஒன்று தான் தீபாவளி. இந்த தினத்தில் மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடுவது வழக்கம். ஆனால் இந்த பட்டாசுகளால் சுற்றுச்சூழல் மாசு அடைவதாக அர்ஜுன் கோபால், சுபாஷ் தத்தா உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் பட்டாசு தயாரிப்பு விற்பனை மற்றும் வெடிக்க தடை விதிக்க கோரி வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஏ.எஸ்.போபண்ணா அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
அப்போது பட்டாசு தயாரிப்பில் பெரியன் என்ற வேதிப்பொருள் அதிகமாக பயன்படுத்துவதால் இயற்கை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என மனுதாரர்கள் வாதம் செய்தனர். அதற்கு பட்டாசு தயாரிப்பு நிறுவனங்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தற்போது பசுமை பட்டாசுகள் மட்டுமே தயாரிக்கப்பட்டு வருவதாகவும்,அதனால் சுற்றுப்புற சூழல் பாதிப்பு ஏற்படாது என்றும் தெரிவித்தனர். இப்படி இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளனர்.
பயிற்சி முடிந்த தோனி இளம் வீரருக்காக செய்த அந்த செயல்…, இணையத்தில் வைரலாகும் வீடியோ உள்ளே!!