சென்னையில் பிரபல கடையில் திடீர் தீ விபத்து.., அணைக்க முடியாமல் போராடும் தீயணைப்பு வீரர்கள்!!

0

சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் இரண்டு பிரபல ஜவுளி கடைகள் செயல்பட்டு வருகிறது. எப்போதும் கூட்டமாக இருக்கும் இந்த கடையில் ஞாயிற்றுக்கிழமையான இன்று அதிகாலை எதிர்பாராத விதமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கொஞ்சம் கொஞ்சமாக தீ பரவத் தொடங்கியது. உடனே தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், கட்டிடம் முழுவதும் தீ பரவியதால் அணைக்க முடியாமல் வீரர்கள் கொஞ்சம் சிரமத்திற்கு ஆளாகினர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்த தீ விபத்தினால், அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்துள்ளது. தொடர்ந்து தீயணைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த தீ விபத்தில் ஜவுளிக் கடையின் 2 மாடிகள் முழுவதுமாக இதில் சேதமடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here