
தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் ஹோட்டல் உணவுகளை விரும்பி சாப்பிட்டு வருகின்றனர். இன்னும் சிலர் தங்களின் வீடுகளில் இருந்தபடியே ஆன்லைனில் உணவுகளை ஆர்டர் செய்கின்றனர். அந்த வகையில் சண்டிகரில் மாநிலத்தை சேர்ந்த சுதீப் கோயல் என்பவர் 2021 ஆம் ஆண்டு ஆன்லைனில் ரூ 2149.35க்கு சைவ உணவு ஆர்டர் செய்துள்ளார்.

ஆனால் அவருக்கு அசைவ உணவு டெலிவரி செய்யப்பட்டுள்ளது. இதனால் அதிருப்தி அடைந்த அந்த நபர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் ஆணைய அதிகாரி அந்த உணவகத்திற்கு ரூ 42,000 அபராதம் விதித்துள்ளார்.