மாண்டஸ் புயலால் மரக்கிளை விழுந்து உயிரிழந்த கூலி தொழிலாளி.,ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கி முதல்வர் உத்தரவு!!

0
மாண்டஸ் புயலால் மரக்கிளை விழுந்து உயிரிழந்த கூலி தொழிலாளி.,ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கி முதல்வர் உத்தரவு!!
மாண்டஸ் புயலால் மரக்கிளை விழுந்து உயிரிழந்த கூலி தொழிலாளி.,ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கி முதல்வர் உத்தரவு!!

இயற்கை பேரிடர்:

உலகெங்கும் மக்கள் தொகைக்கு ஏற்ப தொழில்நுட்ப வளர்ச்சி, வாகனங்கள் போன்றவை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் புவி வெப்பமயமாதல் ஏற்பட்டு பல்வேறு நாடுகளிலும் கடல் சீற்றம், புயல், நிலநடுக்கம் போன்ற இயற்கை பேரிடர்கள் அவ்வப்போது நடைபெற்றதாக பல்வேறு செய்திகள் வெளியாகிய வண்ணம் இருந்து வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இதனால் பல உயிர் சேதங்களும் ஏற்படும் அவல நிலை தொடர்கிறது. இதையடுத்து சென்னை அயனாவரம் பகுதியில் முன்னதாக ஏற்பட்ட மாண்ட்ஸ் புயலால், வலுவிழந்த நிலையில் இருந்த மரக்கிளை கூலி தொழிலாளி சாதிக் பாட்ஷா (வயது 54) என்பவர் மீது எதிர்பாராத விதமாக விழுந்தது. இந்த விபத்தில் படுகாயமடைந்த இவரை, பொது மக்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் நியூஸ்.,இனி மதிய உணவுடன் இதையும் வழங்க முடிவு! ரூ.371 கோடி ஒதுக்கீடு செய்து உத்தரவு!!

ஆனால் ஜனவரி 3ம் தேதி அன்று, அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கோர சம்பவத்தை அறிந்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயிரிழந்த சாதிக் பாட்ஷாவின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறியதோடு, முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கி உள்ளார். மேலும் இதுபோன்ற சம்பவம் இனி நடக்காமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here