தமிழக அரசின் பட்ஜெட் வருகிற மார்ச் 20 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட இருக்கும் நிலையில், தொழில் நிறுவனங்கள், சிறு குறு தொழில் நிறுவன பிரதிநிதிகளிடன் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று ஆலோசனை நடத்த இருக்கிறார்.
பட்ஜெட் தாக்கல்
ஆண்டுதோறும் தமிழ்நாடு பட்ஜெட் பிப்ரவரி மார்ச் மாதங்களில் தாக்கல் செய்யப்படும். இந்நிலையில் இந்த ஆண்டிற்கான பட்ஜெட் வருகிற மார்ச் 20 ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 2023-24 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் மார்ச் 20 ஆம் தேதி காலை 10 மணிக்கு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்வார் எனவும், 2022-23 ஆம் ஆண்டின் கூடுதல் செலவீன மானிய கோரிக்கையை நிதித்துறை அமைச்சர் மார்ச் 28 ஆம் தேதி தாக்கல் செய்வார் என தெரிவிக்கப்பட்டது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
பட்ஜெட்டில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் ரூ.1000 ஊக்கத்தொகை குறித்த அறிவிப்பு வெளியாகும் என முதல்வர் ஸ்டாலின் ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்து இருக்கிறார். அதனை தொடர்ந்து நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் குறித்து தொழில் நிறுவனங்கள், சிறு குறு தொழில் நிறுவன பிரதிநிதிகளிடன் இன்று (மார்ச்.2) ஆலோசனை நடத்துகிறார். மேலும் வருகிற மார்ச் 6 ஆம் தேதி விவசாய சங்க பிரதிநிதிகளுடன் நிதியமைச்சர் ஆலோசனை நடத்த இருக்கிறார். மார்ச் 20 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதற்கு அடுத்த நாள் வேளாண் பட்ஜெட் மார்ச் 21 ஆம் தேதி தாக்கல் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.