இன்று 43 வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம்: எதெற்கெல்லாம் வரி விலக்கு??? மக்கள் எதிர்பார்ப்பு!!!

0

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று காலை 11 மணிக்கு 43வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் காணொளி காட்சி வாயிலாக நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் கொரோனா மருந்து, மருத்துவ உபகரணங்களுக்கு வரி விலக்கு அளிப்பது, மாநிலங்களுக்கு வரி இழப்பை ஈடு செய்வது குறித்து விவாதிக்கப்படும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பொதுவாகவே சரக்கு சேவை வரி கவுன்சில் கூட்டம் (GST) மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மத்திய நிதி அமைச்சர் தலைமையில் நடத்தப்பட வேண்டும். ஆனால் தற்போது நாடு, கொரோனா வைரஸ் நோய்த்தொற்றால் பாதிப்பிற்கு உள்ளாகி வருவதால் எட்டு மாதங்களாக இந்த ஜி.எஸ்.டி கூட்டம் ஒரு முறை கூட நடத்தப்படவில்லை. இந்நிலையில் 8 மாதங்களுக்கு பிறகு இந்த கூட்டம் காணொளி காட்சி வழியாக இன்று நடைபெறுகிறது.

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் மாநில நிதி அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் இக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள். தமிழகத்தின் சார்பில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முதல்முறையாக ஜி.எஸ்.டி  கூட்டத்தில் கலந்து கொள்கிறார். காணொலிக்காட்சி வாயிலாக ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது. மருந்து, மருத்துவ உபகரணங்களுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு கோர மாநிலங்கள் திட்டமிட்டுள்ளன.

இந்த விவகாரம், ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்படும். ஆனால் கொரோனா மருந்து, தடுப்பூசி ஆகியவற்றுக்கு வரி விலக்கு அளித்தாலும், உள்ளீட்டு வரிசலுகையைப் பெற முடியாது என்பதால், இவற்றின் விலை குறையாது என ஏற்கனவே  நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார்.  இதனால் இப்பிரச்சனை குறித்து காரசாரமான விவாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here