Tuesday, April 20, 2021

பணத்தைக் கட்டு இல்லை என்றால், நீ செத்து விட்டதாக சான்றிதழை வாங்கிக் கொடு – நிதி நிறுவன ஊழியர் மிரட்டல்..!!

Must Read

டிராக்டர் வாங்க வாங்கிய கடன் தொகையைக் கட்ட முடியாவிட்டால், கடனை முடிக்க இறப்புச் சான்றிதழை கொடு என்று மிரட்டிய தனியார் நிதி நிறுவன ஊழியர்கள்.

டிராக்டர் கடன்:

திருச்சி மாவட்டம் குருவம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முருகானந்தம் என்பவர் தனது தாயுடன் வாழ்ந்து வருகிறார். அவர் ஒரு தனியார் நிதி நிறுவனம் மூலம் கடனில் டிராக்டர் வாங்கியதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!!

emi news
emi news

3 தவணைகளாக 9 ஆயிரம் ரூபாய் செலுத்திய முருகானந்தம், கொரோனா ஊரடங்கு காரணமாக வேலையின்றி தவித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

ஊரடங்கில் கடன் நெருக்கடி:

இந்நிலையில் அத்தனியார் நிதி நிறுவன ஊழியர்கள், தவணையை செலுத்தும்படி முருகானந்தத்திற்கு நெருக்கடி கொடுத்துள்ளனர். கொரோனா ஊரடங்கில் கடன் தவணை செலுத்தும்படி கேட்டு தொந்தரவு செய்யக் கூடாது என்று அரசின் உத்தரவு பற்றி முருகானந்தம் தெரிவித்துள்ளார். அதனை பொருட்படுத்தாமல் ஊழியர்கள் முருகானந்தத்திற்கு நெருக்கடி கொடுத்த வண்ணமே இருந்து வந்துள்ளனர்.

மிரட்டலான குறுஞ்செய்தி:

இந்நிலையில், தவணை வசூலிக்கும் ஊழியர் ஒருவர், பணத்தைக் கட்டு இல்லை என்றால், நீ செத்து விட்டதாக சான்றிதழை கொடு என்று முருகானந்தத்திற்கு வாட்ஸ் ஆப்பில் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். இதனைக் கண்ட முருகானந்தம், வாத்தலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட தனியார் நிதி நிறுவனத்திடம் இதுக்குறித்து விசாரித்த போது, அவர்கள் டிராக்டர் கடனுக்கான தவணையை கேட்கவில்லை என்றும், அவர் கார் வாங்க வாங்கிய கடனுக்கான தவணையைத்தான் கேட்டதாக கூறியுள்ளனர். மேலும், முருகானந்தத்தின் தொலைபேசியை அவரது குடும்பத்தினர் எடுத்து அவர் இறந்துவிட்டதாக கூறியதனால் தான் இறப்பு சான்றிதழ் கேட்டதாகவும் கூறியுள்ளனர். இதுக்குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி அளவிலான தேர்வு – தமிழக அரசு அதிரடி!!

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் 10ம் வகுப்பு...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -