இடைகாலத்தடைக்குப்பின் மீண்டும் திரைப்பட இசைக்கலைஞர் சங்கத் தேர்தல்.,  தேதி மற்றும் முழு விவரம் வெளியீடு!!  

0
இடைகாலத்தடைக்குப்பின் மீண்டும் திரைப்பட இசைக்கலைஞர் சங்கத் தேர்தல்.,  தேதி மற்றும் முழு விவரம் வெளியீடு!!  
கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் திரைப்பட இசைக்கலைஞர் சங்கத் தேர்தல் நடைபெற இருந்தது.  ஆனால் சங்க உறுப்பினர்கள் சங்கத்தின் விதியை மீறி தேர்தல் நடத்துகின்றனர் எனக் கூறி சபேசன்  என்பவர்  சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதையொட்டி திரைப்பட இசை கலைஞர் சங்கத்திற்கான தேர்தலுக்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருந்தது.
இந்நிலையில் திரைப்பட இசைக்கலைஞர் சங்க தேர்தலை நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. மேலும் அதன்படி இம்மாதம் 18 ஆம் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்தலுக்கான வாக்கு பணி நடைபெற உள்ளது. மேலும் சங்க உறுப்பினர்கள் அனைவரும் தங்களது அடையாள அட்டையை காட்டி வாக்களிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here