FIH ப்ரோ லீக்: முதலிடத்தை எதிர்நோக்கி இந்தியா…, தொடர் தோல்வியில் இருந்து மீளுமா??

0
FIH ப்ரோ லீக்: முதலிடத்தை எதிர்நோக்கி இந்தியா..., தொடர் தோல்வியில் இருந்து மீளுமா??

சர்வதேச இந்திய ஆடவர் ஹாக்கி அணியானது, தற்போது FIH ப்ரோ லீக் தொடரில் கவனம் செலுத்தி வருகிறது. இந்த தொடரில், இந்திய அணியானது, கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய மற்றும் ஜெர்மனி அணிகளை வீழ்த்தியது. இதனை தொடர்ந்து, நடைபெற்ற மற்றொரு போட்டியில் ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி 2-2 என டிரா செய்தது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த தொடர் வெற்றிகள் மூலம், FIH ப்ரோ லீக்கின் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தை பெற்றது. இரண்டு மாத இடைவெளிக்கு பிறகு மீண்டும் தொடங்கிய இந்த FIH ப்ரோ லீக் தொடரில் இந்திய அணி, கடந்த மே 26ல் பெல்ஜியம் அணியிடம் 2-1 என்ற கோல் கணக்கிலும், மே 27ம் தேதி கிரேட் பிரிட்டன் அணியிடம் 4-2 என்ற கோல் கணக்கிலும் தோல்வியடைந்தது.

அவன் பொண்டாட்டியை கூட இனி தொட பயப்படுவான்., வம்பிழுத்த நபருக்கு வரலக்ஷ்மி செய்த செயல்!!

இதன் மூலம், முதலிடத்தில் இருந்த இந்திய அணி தற்போது 19 புள்ளிகளுடன் 2வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அடுத்ததாக இந்திய அணி வரும் ஜூன் 2ம் தேதி மீண்டும் பெல்ஜியம் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இதில் வெற்றி பெறுமேயானால், FIH ப்ரோ லீக்கின் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தை பிடிக்க முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here