FIH ப்ரோ லீக்கில் தொடர் வெற்றிகளை குவிக்கும் இந்தியா…, உலக தரவரிசையில் டாப் 5 க்கு முன்னேற்றம்!!

0
FIH ப்ரோ லீக்கில் தொடர் வெற்றிகளை குவிக்கும் இந்தியா..., உலக தரவரிசையில் டாப் 5 க்கு முன்னேற்றம்!!
FIH ப்ரோ லீக்கில் தொடர் வெற்றிகளை குவிக்கும் இந்தியா..., உலக தரவரிசையில் டாப் 5 க்கு முன்னேற்றம்!!

FIH ப்ரோ லீக் தொடரில், இந்திய அணி தொடர் வெற்றிகளை குவித்ததன் மூலம், உலக தரவரிசையில் டாப் 5ல் நுழைந்துள்ளது.

ஹாக்கி தரவரிசை:

சர்வதேச இந்திய ஆடவர் ஹாக்கி அணியானது, தற்போது FIH ப்ரோ லீக் தொடரில் கவனம் செலுத்தி வருகிறது. இந்த தொடரில், இந்திய அணியானது, கடந்த ஒரு வாரத்திற்குள், பலம் வாய்ந்த ஆஸ்திரேலியா மற்றும் ஜெர்மனி அணிகளை எதிர்த்து தலா 2 போட்டிகளில் மோதியது. இந்த 4 போட்டிகளிலும் இந்திய அணி தொடர்ந்து வெற்றி பெற்று, FIH ப்ரோ லீக்கின் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தை பெற்று அசத்தி உள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

மேலும், இந்த போட்டிகளின் முடிவால், இந்திய அணி, ஹாக்கியின் உலக தரவரிசையிலும் முன்னேற்றம் அடைந்துள்ளது. அதாவது, சமீபத்தில் முடிந்த உலகக் கோப்பையால் இந்திய அணி 2478.22 புள்ளிகளுடன் 6 வது இடத்தில் இருந்தது. தற்போது, 2689.07 புள்ளிகளுடன் 4 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

ரூ. 907 கோடியை தொட்ட உலக கோப்பைக்கான பரிசு தொகை…, வெளியான நியூ அப்டேட்!!

இந்த தரவரிசையில், நெதர்லாந்து (2848.29), பெல்ஜீயம் (2845.82) மற்றும் ஜெர்மனி (2752) புள்ளிகளுடன் முதல் மூன்று இடங்களில் உள்ளனர். தொடர் தோல்வியை சந்தித்துள்ள ஆஸ்திரேலிய அணியானது, 2576.27 புள்ளிகளுடன் 5 வது இடத்தையும், இங்கிலாந்து அணி 2536.24 புள்ளிகளுடன் 6 வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here