கடைசி நேரத்தில் திர்லிங்கான வெற்றி பெற்ற இந்தியா…, ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடர்ந்து முதலிடம்!!

0
கடைசி நேரத்தில் திர்லிங்கான வெற்றி பெற்ற இந்தியா..., ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடர்ந்து முதலிடம்!!
கடைசி நேரத்தில் திர்லிங்கான வெற்றி பெற்ற இந்தியா..., ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடர்ந்து முதலிடம்!!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான FIH ப்ரோ லீக் ஹாக்கி போட்டியில், இந்திய அணி கடைசி நேரத்தில் 4-3 என்ற கோல் கணக்கில் திர்லிங்கான வெற்றி பெற்று அசத்தியது.

IND vs AUS:

இந்தியா, ஆஸ்திரேலியா, ஸ்பெயின், ஜெர்மனி உள்ளிட்ட 9 அணிகளுக்கு இடையே, சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பாக FIH ப்ரோ லீக் தொடரின் 4வது சீசன் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், நேற்று இந்திய அணியானது, ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து போட்டியிட்டது. இரு பலம் வாய்ந்த அணிகளுக்கு இடையே நடைபெற்ற இந்த போட்டியில், இந்தியாவின் விவேக் பிரசாத் 2வது நிமிடத்திலேயே கோல் ஒன்றை அடித்து அணியை முன்னிலை பெற வழி வகுத்தார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இதனை தொடர்ந்து, ஆட்டத்தின் 37 வது நிமிடத்தில் ஆஸ்திரேலியாவின் நாதன் எஃப்ராம்ஸ் ஒரு கோல் அடிக்க, முதல் பாதியானது 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தது. இதையடுத்து தொடங்கப்பட்ட 2வது பாதியில் இந்தியா சார்பாக சுக்ஜீத் சிங்கும், ஆஸ்திரேலியா சார்பாக டிம் ஹோவர்ட் தலா ஒரு கோல்கள் அடிக்க, ஆட்ட நேர முடிவில் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது.

ப்பா என்ன லுக்கு.., அந்த ஒத்த பார்வைல மொத்தமா பறிகொடுத்து நிக்கும் இளசுகள்.., பழைய form க்கு சென்ற ரோஷினி !!

இதனால், பெனால்டி ஷூட்டை நோக்கி ஆட்டம் நகர்ந்தது. இதில், இரு அணிகளில் இருந்தும் தலா 5 வீரர்களை பெனால்டி ஷூட்டை அடிக்க அழைக்கப்பட்டனர். இதன் முடிவிலும் 3-3 என கோல் கணக்கில் சமநிலை இருந்தால், மேலும் தலா ஒரு வீரருக்கு கோல் அடிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதில், இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் கோல் அடிக்க, ஆஸ்திரேலிய வீரரது கோல் இந்தியாவின் கோல்கீப்பர் அற்புதமாக தடுத்ததன் மூலம், இந்திய அணி 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம், இந்திய அணி 19 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here