நடப்பு சாம்பியன் அணியை வீழ்த்திய இந்தியா…, FIH ப்ரோ லீக் புள்ளிப் பட்டியலில் முன்னிலை!!

0
நடப்பு சாம்பியன் அணியை வீழ்த்திய இந்தியா..., FIH ப்ரோ லீக் புள்ளிப் பட்டியலில் முன்னிலை!!
நடப்பு சாம்பியன் அணியை வீழ்த்திய இந்தியா..., FIH ப்ரோ லீக் புள்ளிப் பட்டியலில் முன்னிலை!!

நடப்பு சாம்பியனான ஜெர்மனி அணியை 6-3 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வீழ்த்தி FIH ப்ரோ லீக்கின் முதலிடத்தை எட்டி உள்ளது.

FIH ப்ரோ லீக்:

FIH ப்ரோ லீக் தொடரில், இந்திய ஆடவர் ஹாக்கி அணியானது, நடப்பு சாம்பியனான ஜெர்மனி அணியை எதிர்த்து போட்டியிட்டது. இந்த போட்டியில், ஜெர்மனி அணியின் டாம் கிராம்புஷ் 3 வது நிமிடத்திலேயே கோல் ஒன்றை அடித்து அசத்தினார். இதனை தொடர்ந்து, இந்தியாவின் ஜுக்ராஜ் சிங், அபிஷேக், செல்வம் கார்த்தி மற்றும் ஹர்மன்பிரீத் சிங் ஆகியோர் 21, 22, 24 மற்றும் 26 வது நிமிடங்களில் அடுத்தடுத்து கோல்கள் அடித்து அதிரடி காட்டினர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதற்கிடையில், ஜெர்மனியின் பெயில்லட் மற்றும் மால்டே ஹெல்விக், 23 மற்றும் 31 வது நிமிடங்களில் இரண்டு கோல்கள் அடித்தனர். இதனால், ஆட்டத்தின் முதல் பாதியில், இந்திய அணியானது 4-3 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்று இருந்தது.

2வது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்த ஏடிகே மோகன் பகான்…, ஹைதராபாத் அணியை வீழ்த்தி அசத்தல்!!

இதையடுத்து தொடங்கப்பட்ட, 2வது பாதியில் ஜெர்மனி வீரர்கள் கோல் அடிக்காத நிலையில், இந்தியாவின் அபிஷேக் மற்றும் செல்வம் கார்த்தி மேலும் இரண்டு கோல்கள் அடித்தனர். இதனால், ஆட்ட நேர முடிவில், இந்திய அணியானது 6-3 என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பியனான ஜெர்மனி அணியை வீழ்த்தி 17 புள்ளிகளுடன் முதலிடத்தை எட்டி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here