அதிரடியான இந்திய மகளிர் படை தயார்…, FIH நேஷனல் கோப்பையுடன் நாடு திரும்புவார்களா??

0
அதிரடியான இந்திய மகளிர் படை தயார்..., FIH நேஷனல் கோப்பையுடன் நாடு திரும்புவார்களா??
அதிரடியான இந்திய மகளிர் படை தயார்..., FIH நேஷனல் கோப்பையுடன் நாடு திரும்புவார்களா??

FIH ஹாக்கி நேஷனல் கோப்பைக்கான இந்திய மகளிர் அணியை கோல்கீப்பரான சவிதா வழி நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய மகளிர் ஹாக்கி அணி:

இந்தியாவின் சர்வதேச ஆடவர் ஹாக்கி அணி FIH புரோ லீக் தொடரில் இதுவரை 4 போட்டிகளில் விளையாடி 2 ல் வெற்றி, தலா ஒரு போட்டியில் தோல்வி மற்றும் டிரா செய்து உள்ளது. இந்த லீக் தொடரானது அடுத்த வருடம் வரை ஒரு சீரான இடைவெளியில் நடைபெறும். இதே போல, சர்வதேச மகளிர் ஹாக்கி அணிக்கான FIH நேஷனல் கோப்பைக்கான தொடர் அடுத்த மாதம் (டிசம்பர்) 11ம் தேதி முதல் தொடங்கி 17ம் தேதி வரை ஸ்பெயினில் நடைபெற உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த FIH நேஷனல் கோப்பைக்கான தொடரில் இந்தியா, அயர்லாந்து, ஸ்பெயின் உள்ளிட்ட 8 அணிகள் இரு பிரிவுகளின் கீழ் தலா 4 அணிகளாக பிரிந்து போட்டி போட்டு கொள்ள உள்ளன. இதில், இந்திய அணியானது, குரூப் 2 வில் ஜப்பான், தென் ஆப்பிரிக்கா, சிலி உள்ளிட்ட அணிகளுடன் இடம் பெற்றுள்ளது.

ஐபிஎல் மினி ஏலம் எப்போது?? எங்கே?? முழு விவரம் உள்ளே!!

இந்த கோப்பைக்கான 20 பேர் கொண்ட இந்திய அணியை, அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்கான இந்திய அணியை சவிதா வழி நடத்த உள்ளார். இந்த தொடரில், இந்திய அணி தனது முதல் போட்டியை சிலி அணிக்கு எதிராக விளையாட உள்ளது.

FIH நேஷனல் கோப்பைக்கான இந்திய மகளிர் அணி குறித்த முழு விவரம் இதோ:
  • கோல்கீப்பர்ஸ்: சவிதா (கேப்டன்), பிச்சு தேவி கரிபம்.
  • டிஃபெண்டர்ஸ்: டீப் கிரேஸ் எக்கா (துணை கேப்டன்), குர்ஜித் கவுர், நிக்கி பிரதான், உதிதா, இஷிகா சவுத்ரி.
  • மிட்பீல்டர்ஸ்: நிஷா, சலீமா டெடே, சுசிலா சானு புக் ரம்பம், மோனிகா, நேஹா, சோனிகா, ஜோதி, நவ்ஜோத் கவுர்
  • பார்வெட்ஸ்: வந்தனா கட்டாரியா, லால்ரெம்சியாமி, நவ்நீத் கவுர், சங்கீதா குமாரி, பியூட்டி டங்டங்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here