FIH ஆடவர் ஹாக்கி அணிக்கான தரவரிசை வெளியீடு…, டாப் 10ல் இடம் பிடித்த இந்தியா!!

0
FIH ஆடவர் ஹாக்கி அணிக்கான தரவரிசை வெளியீடு..., டாப் 10ல் இடம் பிடித்த இந்தியா!!
FIH ஆடவர் ஹாக்கி அணிக்கான தரவரிசை வெளியீடு..., டாப் 10ல் இடம் பிடித்த இந்தியா!!

உலக கோப்பை ஹாக்கி தொடரை வென்ற ஜெர்மனி அணியானது, FIH ஆடவர் ஹாக்கி அணிக்கான தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளது.

ஹாக்கி தரவரிசை:

இந்தியாவில் உலக கோப்பை ஹாக்கி தொடரானது கடந்த 13ம் தேதி முதல், 16 அணிகளுக்கு இடையே விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த உலக கோப்பை தொடரில், ஜெர்மனி அணி பெல்ஜியம் அணியை 5-4 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது. இதன் மூலம், ஜெர்மனி அணி மூன்றாவது முறையாக உலக கோப்பையை வென்ற அணியாக வலம் வருகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

உலக கோப்பை ஹாக்கி தொடர் முடிவடைந்த இந்நிலையில், FIH ஆடவர் ஹாக்கி அணிக்கான தரவரிசை வெளியாகி உள்ளது. இந்த தரவரிசையில், சாம்பியன் பட்டத்தை வென்ற, ஜெர்மனி அணி 2912.47 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளது. நெதர்லாந்து அணி 2848.29 புள்ளிகளுடன் 2வது இடத்தையும், உலக கோப்பையை வெல்ல தவறிய பெல்ஜியம் அணி, 2845.82 புள்ளிகளுடன் 3வது இடத்தையும் பிடித்துள்ளது.

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு முன் பிசிசிஐ போட்ட மாஸ்டர் பிளான்…, இந்திய வீரர்கள் இதை பயன்படுத்துவார்களா??

இதனை தொடர்ந்து, ஆஸ்திரேலியா (2792.96), இங்கிலாந்து (2536.24) மற்றும் இந்தியா (2478.22) புள்ளிகளுடன் 4, 5 மற்றும் 6 வது இடத்தில் உள்ளனர். அர்ஜென்டினா (2260.32), ஸ்பெயின் (2093.52), கொரியா (1942.50) மற்றும் நியூசிலாந்து (1899.79) புள்ளிகளுடன் டாப் 10 இடத்தில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here