சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பானது, ஹாக்கி போட்டியில் சிறந்து விளங்கும் ஆடவர் அணிகளுக்கு ஏற்ப தரவரிசையை புதுப்பித்து வெளியிட்டுள்ளது. இந்த தரவரிசையில் இந்திய அணி, சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் தொடரை வென்றதன் மூலம் 2771.35 புள்ளிகளை பெற்று 3 வது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதில், 3112.74 புள்ளிகளுடன் நெதர்லாந்து அணி முதலிடத்திலும், பெல்ஜியம் அணி 2988.58 புள்ளிகளுடன் 2வது இடத்திலும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதை போல, பெண்களுக்கான ஹாக்கி தரவரிசையில் 2324.56 புள்ளிகளுடன் 8 வது இடத்தில் இருந்த இந்திய அணி 7 வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. இந்த தரவரிசையில் முதலிரண்டு இடத்தில் நெதர்லாந்து (3422.40) மற்றும் ஆஸ்திரேலிய (2817.73) அணிகள் உள்ளன.
விஜய் ஆண்டனி மகள் தூக்கிட்டு தற்கொலை…, அதிர்ச்சியில் திரையுலகம்!!