FIFA உலக கோப்பை கால்பந்து தொடர்: அடுத்த சீசனுக்கான இடம், அணிகள் மற்றும் குழுக்கள் அப்டேட்!!

0
FIFA உலக கோப்பை கால்பந்து தொடர்: அடுத்த சீசனுக்கான இடம், அணிகள் மற்றும் குழுக்கள் அப்டேட்!!
FIFA உலக கோப்பை கால்பந்து தொடர்: அடுத்த சீசனுக்கான இடம், அணிகள் மற்றும் குழுக்கள் அப்டேட்!!

FIFA உலக கோப்பை கால்பந்து தொடரின் அடுத்த சீசனுக்கான இடம், அணிகள் மற்றும் குழுக்கள் குறித்த அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.

FIFA உலக கோப்பை:

FIFA உலக கோப்பை கால்பந்து தொடரானது, நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. இந்த தொடரின் கடைசி சீசன் கடந்த ஆண்டு இறுதியில், கத்தாரில் கோலாகலமாக நடைபெற்றது. 32 அணிகளுக்கு இடையே நடைபெற்ற இந்த தொடரில், நட்சத்திர வீரர் மெஸ்ஸின் அர்ஜென்டினா அணி 3 வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த கால்பந்து தொடரானது, உலக அளவில் பல்வேறு ரசிகர்களை தங்கள் ஈர்த்தது. இதனால், அடுத்த உலக கோப்பை சீசனுக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரிக்க தொடங்கி உள்ளது. இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், 2026 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் உலக கோப்பை தொடர் குறித்த அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.

IND vs AUS ODI: முதல் போட்டியில் ரோஹித் விலகியதற்கு இதுதான் காரணமா?? வெளியான தகவல்!!

அதாவது, கனடா, மெக்சிகோ மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை மையமாக கொண்டு 48 அணிகளுக்கு இடையே 2026 ஆம் ஆண்டிற்கான உலக கோப்பையை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இந்த 48 அணிகள் 12 குரூப்களின் கீழ் தலா 4 அணிகளாக பிரிக்கப்பட்ட உள்ளன. இந்த உலக கோப்பை தொடர் 104 போட்டிகளை உள்ளடக்கியதாக இருக்க இருக்க கூடும் என தகவல் வெளியாகி உள்ளது. இதுவரை உலக கோப்பை கால்பந்து தொடரானது, 13-லிருந்து 32 அணிகளுக்கு இடையே தான் நடத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here