அமெரிக்காவிடம் வீழ்ந்த ஈரான்…, உலக கோப்பையில் இருந்து வெளியேற்றம்!!

0
அமெரிக்காவிடம் வீழ்ந்த ஈரான்..., உலக கோப்பையில் இருந்து வெளியேற்றம்!!
அமெரிக்காவிடம் வீழ்ந்த ஈரான்..., உலக கோப்பையில் இருந்து வெளியேற்றம்!!

உலக கோப்பை கால்பந்து தொடரில், குரூப் B யில் நடந்த லீக் சுற்றுகள் முடிவில், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளன.

FIFA உலக கோப்பை:

FIFA உலக கோப்பை கால்பந்து தொடரின் லீக் சுற்றுகள் அனைத்தும் டிசம்பர் 3ம் தேதியுடன் முடிவடைய உள்ளன. இந்த தொடரில், குரூப் B யில் உள்ள அணிகளுக்கிடையேயான லீக் சுற்றுகள் இன்றுடன் முடிந்தது. இதில், இன்று முதல் போட்டியில், ஈரான் அணியை எதிர்த்து அமெரிக்கா அணி மோதியது. இந்த போட்டியில், வெற்றி பெறும் அணி ரவுண்டு 16 க்கு முன்னேறும் என்பதால், இரு அணிகளும் கடுமையாக போராடினர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

ஆட்டம் ஆரம்பித்த 38 வது நிமிடத்திலேயே அமெரிக்காவின் கிறிஸ்டியன் புலி சிக் கோல் ஒன்றை அடித்து அணியை முன்னிலை பெற செய்தார். இதன் பிறகு, அமெரிக்க அணி, ஈரான் அணியை கோல் அடிக்க விடாமல் தடுத்து மட்டுமே வந்தது. இதனால், அமெரிக்க அணி ஒரு கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து, நடைபெற்ற வேல்ஸ் அணிக்கு எதிராக இங்கிலாந்து அணி விளையாடியது.

சராசரி 66 வைத்தாலும் சஞ்சு சாம்சனுக்கு நோ…, பார்மில் இல்லனாலும் ரிஷப் பந்த்க்கு வாய்ப்பு!!

இந்த போட்டியில், முழு ஆதிக்கத்தையும் செலுத்திய இங்கிலாந்து அணி 50, 51 மற்றும் 68 ஆகிய நிமிடங்களில் தொடர் தாக்குதலை மேற்கொண்டு மூன்று கோல்களை அடித்தது. வேல்ஸ் அணி கடைசி வரை ஒரு கோல் கூட அடிக்காத நிலையில், 0-3 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றிகளால் இங்கிலாந்து 7 மற்றும் அமெரிக்கா 5 புள்ளிகளுடன் ரவுண்டு 16க்கு முன்னேறியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here