ஜெயித்தும் உலக கோப்பையில் இருந்து வெளியேறிய ஜெர்மனி…, அடுத்த சுற்றுக்கு முன்னேறிய ஜெர்மனி!!

0
ஜெயித்தும் உலக கோப்பையில் இருந்து வெளியேறிய ஜெர்மனி..., அடுத்த சுற்றுக்கு முன்னேறிய ஜெர்மனி!!
ஜெயித்தும் உலக கோப்பையில் இருந்து வெளியேறிய ஜெர்மனி..., அடுத்த சுற்றுக்கு முன்னேறிய ஜெர்மனி!!

FIFA உலக கோப்பை தொடரில், 4-2 என்ற கோல் வித்தியாசத்தில் கோஸ்ட்டா ரிக்கா அணியை ஜெர்மனி அணி வீழ்த்தியும் உலக கோப்பையிலிருத்து வெளியேறி உள்ளது.

FIFA உலக கோப்பை:

FIFA உலக கோப்பை தொடரின் 22 வது சீசன் கத்தாரில் விறுவிறுப்பாக காலிறுதிக்கு முந்தைய சுற்றை நோக்கி நடைபெற்று வருகிறது. இந்த வகையில், இன்று குரூப் E யில் உள்ள ஜப்பான் மற்றும் ஸ்பெயின் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது. இதில், ஸ்பெயின் அணி வீரர் 11வது நிமிடத்திலேயே ஒரு கோல் அடித்து அணியை முன்னிலை பெற செய்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதனால், ஆட்டத்தின் முதல் பாதியில், 0-1 என்ற கோல் கணக்கில் ஜப்பான் அணி பின்தங்கி இருந்தது. இதையடுத்து, ஆட்டத்தின் 2வது பாதியில் எழுச்சி கண்ட ஜப்பான் அணி வீரர்கள் 48 மற்றும் 51 வது நிமிடத்தில் இரு கோல்கள் அடித்து, 2-1 என்ற கணக்கில் ஸ்பெயின் அணியை வீழ்த்தியது.

இதனை தொடர்ந்து, கோஸ்ட்டா ரிக்கா அணியை எதிர்த்து ஜெர்மனி அணி மோதியது. இரு அணி வீரர்களும் மாறி மாறி கோல் அடிக்க பரபரப்பாக நகர்ந்த இந்த போட்டியில், ஜெர்மனி அணி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதில், ஜெர்மனி வெற்றி பெற்றாலும், அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. குரூப் E யில், ஜப்பான் 6, ஸ்பெயின் 4 புள்ளிகளுடன் முதல் இரண்டு இடத்தை பிடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here