பிரேசிலின் 60 ஆண்டுகால சாதனையை முறியடிப்பதே இலக்கு…, பிரான்ஸ் பயிற்சியாளர் ஓபன் டாக்!!

0
பிரேசிலின் 60 ஆண்டுகால சாதனையை முறியடிப்பதே இலக்கு..., பிரான்ஸ் பயிற்சியாளர் ஓபன் டாக்!!
பிரேசிலின் 60 ஆண்டுகால சாதனையை முறியடிப்பதே இலக்கு..., பிரான்ஸ் பயிற்சியாளர் ஓபன் டாக்!!

நடப்பு சாம்பியனான பிரான்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியதை அடுத்து, பிரேசிலின் 60 வது ஆண்டு கால முறியடிக்க முடியாத சாதனையை நிகழ்த்த உள்ளதாக பயிற்சியாளர் கூறியுள்ளார்.

FIFA உலக கோப்பை:

கத்தாரில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து தொடர் இறுதிப் போட்டியை எதிர்நோக்கி உள்ளது. இந்த இறுதிப் போட்டிக்கு, குரோஷியா அணியை வீழ்த்தி அர்ஜென்டினா அணியும், மொரோக்கோ அணியை வீழ்த்தி பிரான்ஸ் அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதில், அர்ஜென்டினா அணியானது 6 வது முறையாகவும், பிரான்ஸ் அணி 4 வது முறையாகவும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். இதற்கு முன், இந்த இரு அணிகளும் தலா இரண்டு முறை உலக கோப்பையை தட்டிச் சென்றுள்ளனர் என்பது குறிப்பித்தக்கது. இதனால், 3 வது முறையாக இந்த இரு அணிகளில் யார் கோப்பையை வெல்லுவார் என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

FIFA உலக கோப்பை: அரையிறுதியில் வீழ்ந்த மொரோக்கோ…, இறுதி போட்டியில் நுழைந்த பிரான்ஸ்!!

மேலும், 1958 மற்றும் 1962 ஆகிய ஆண்டுகளில் பிரேசிலின் தொடர் இரட்டை வெற்றிகளுக்குப் பிறகு, கிட்டத்தட்ட 60 ஆண்டுகளில் தொடர்ச்சியாக உலகக் கோப்பையை எந்த அணியும் வெல்லவில்லை. இந்த சாதனையை முறியடிப்பதை முக்கிய நோக்கம் என கடந்த முறை சாம்பியன் பட்டத்தை வென்ற பிரான்ஸ் அணியின் பயிற்சியாளர் டிடியர் கிளாட் டெஷாம்ப்ஸ் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here