World cup போட்டியை நேர்ல பார்க்கணுமா?? விசாவே தேவையில்லை.., வெளியான புதிய அறிவிப்பு!!

0
World cup போட்டியை நேர்ல பார்க்கணுமா?? விசாவே தேவையில்லை.., வெளியான புதிய அறிவிப்பு!!
World cup போட்டியை நேர்ல பார்க்கணுமா?? விசாவே தேவையில்லை.., வெளியான புதிய அறிவிப்பு!!

கத்தார் நாட்டில் நடைபெறும் FIFA உலகக் கோப்பையை காண வரும் ரசிகர்களுக்கு UAE நாட்டிற்குள் பல முறை நுழையக் கூடிய விசாவை அறிவித்துள்ளனர்.

எமிரேட்ஸ் அறிவித்த புதிய விசா..!

FIFA உலகக் கோப்பைப் போட்டி 2022 ஆம் ஆண்டின் 20 நவம்பர் முதல் 18 டிசம்பர் 2022 வரை கத்தார் நாட்டில் நடைபெற உள்ளது. இது அரபு நாடுகளில் நடைபெறும் முதல் உலகக் கோப்பை ஆகும். மொத்தம் 32 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில், ஒவ்வொரு குரூப்பிலும் தலா 4 அணிகள் என 8 பிரிவுகள் மோத உள்ளன. இந்த அணிகளுக்கு தினமும் நான்கு ஆட்டங்கள் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த கால்பந்து உலக கோப்பையை காண வரும் ரசிகர்களுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் புதிய விசா ஒன்றை அறிவித்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதாவது அனைத்து வெளிநாட்டவர்களுக்கு Hayya card கட்டாயம் வாங்க வேண்டும். இந்த கார்டு வைத்திருப்பவர்களுக்கு விசா வாங்க வேண்டிய கட்டாயம் இல்லை. இந்த ஹய்யா அட்டை வைத்திருப்பவர்கள் 90 நாட்கள் வரை UAE-க்குள் பலமுறை நுழையலாம் என ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். மேலும் ஹய்யா அட்டை பெறுவதன் மூலம் கத்தார் நாட்டிற்கு நுழைவது மட்டும் அல்லாமல் ஸ்டேடியம் செல்லவும், இலவசமாக கத்தார் நாட்டின் மெட்ரோ பயன்படுத்தவும், இலவசமாகப் பஸ் பயன்படுத்தவும் முடியும்.

ஹய்யா கார்டு என்பது FIFA உலகக் கோப்பை 2022 போட்டியை பார்க்க கத்தார் வரும் உலக நாடுகளில் இருக்கும் ரசிகர்களுக்காக என்டரி விசாவாக கொடுக்கப்படுகிறது. இது FIFA உலகக் கோப்பை 2022 நடக்கும் காலகட்டத்தில் முக்கிய அடையாள அட்டையாக பார்க்கப்படுகிறது. இது போன்று அறிவிப்பை எமிரேட்ஸ் அறிவித்ததன் மூலம் பல ரசிகர்களுக்கு மிகவும் வசதியாக அமைந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here