FIFA உலக கோப்பை: கோலின்றி முடிந்த ஆட்டங்கள்…, புள்ளிகளை பகிர்ந்து கொண்ட அணிகள்!!

0
FIFA உலக கோப்பை: கோலின்றி முடிந்த ஆட்டங்கள்..., புள்ளிகளை பகிர்ந்து கொண்ட அணிகள்!!
FIFA உலக கோப்பை: கோலின்றி முடிந்த ஆட்டங்கள்..., புள்ளிகளை பகிர்ந்து கொண்ட அணிகள்FIFA உலக கோப்பை: கோலின்றி முடிந்த ஆட்டங்கள்..., புள்ளிகளை பகிர்ந்து கொண்ட அணிகள்!! !!

FIFA உலக கோப்பை தொடரில் கோல்கள் இல்லாமல் டென்மார்க், துனிசியா மற்றும் மெக்சிகோ, போலந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தன.

FIFA உலக கோப்பை:

சர்வதேச அளவிலான உலக கோப்பை கால்பந்து தொடர், கடந்த 20ம் தேதி முதல் கத்தாரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், நேற்று குரூப் Dயில் உள்ள டென்மார்க் மற்றும் துனிசியா அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது. இதில், இரு அணிகளும் ஒரு கோலுக்காக முயற்சித்து வந்தனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

ஆனாலும், இரு அணிகளும் ஒரு கோல் கூட அடிக்காத நிலையில், போட்டியானது டிராவில் முடிந்தது. இதனால், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டன. இதனை தொடர்ந்து, குரூப் Cயில் இடம் பெற்றுள்ள மெக்சிகோ மற்றும் போலந்து அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில், இரு அணிகளுக்கும் கோல் போடுவதற்கு பல வாய்ப்புகள் சிறப்பாக அமைந்த போதிலும், பினிஷிங் சரி இல்லாமல் தவித்தனர்.

புரோ கபடி லீக்: யு மும்பாவிடம் கெத்து காட்டிய தமிழ் தலைவாஸ்…, புள்ளிப் பட்டியலில் முன்னேறி அசத்தல்!!

அதாவது, அடிக்கிற பந்துகள் கோல் போஸ்ட் கம்பியில் பட்டு, நூலிழையில் கோல் கிடைக்கும் வாய்ப்புகள் நழுவி போனது. இரண்டாவது பாதியில், போலந்து அணிக்கு கோல் போடுவதற்கான அரிய வாய்ப்பாக பெனால்டி ஷாட் கிடைத்தது. ஆனால், அதனையும் போலந்து வீரர் எதிரணி கோல் கீப்பரின் கைக்யை கொடுத்து விட்டார். இதனால், இந்த போட்டியும், கோல் இல்லாமல் டிராவில் முடிந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here