ரூ. 907 கோடியை தொட்ட உலக கோப்பைக்கான பரிசு தொகை…, வெளியான நியூ அப்டேட்!!

0
ரூ. 907 கோடியை தொட்ட உலக கோப்பைக்கான பரிசு தொகை..., வெளியான நியூ அப்டேட்!!
ரூ. 907 கோடியை தொட்ட உலக கோப்பைக்கான பரிசு தொகை..., வெளியான நியூ அப்டேட்!!

நடப்பு வருடம் நடைபெற உள்ள மகளிருக்கான FIFA உலக கோப்பை கால்பந்து தொடருக்கான பரிசு தொகை குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

FIFA உலக கோப்பை:

ஆடவருக்கான FIFA உலக கோப்பை கால்பந்து தொடர் கடந்த ஆண்டு கத்தாரில் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. இந்த உலக கோப்பையை அர்ஜென்டினா அணி 3 வது முறையாக வென்று அசத்தி இருந்தது. இதனை தொடர்ந்து, மகளிருக்கான FIFA உலக கோப்பை கால்பந்து தொடர் இந்த ஆண்டு ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இந்த தொடரில், ஆடவருக்கான உலக கோப்பையை போன்றே 32 அணிகள் பங்கு பெற உள்ளன. மேலும், இந்த 32 அணிகளும், 8 குரூப்களின் கீழ் தலா 4 அணிகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள், விரைவில் வெளியாக கூடும். இந்நிலையில், FIFA உலக கோப்பை தொடருக்கான பரிசு தொகை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

UEFA சாம்பியன்ஸ் லீக்: எதிரணியை ஒரு கோல் வித்தியாசத்தில் வீழ்த்திய மான்செஸ்டர் யுனைடெட் அணி!!

அதாவது, இந்த மகளிர் உலகக் கோப்பைக்கான மொத்த பரிசு தொகையானது 110 மில்லியன் டாலர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பில், ரூ. 907 கோடியாகும். இந்த பரிசு தொகையானது, கடந்த சீசனில் நடைபெற்ற உலக கோப்பையை விட கிட்டத்தட்ட 3 மடங்கு அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here