FIFA மகளிர் உலகக் கோப்பை 2023.., டிக்கெட் விற்பனை எப்போது தெரியுமா? முழு விவரம் இதோ!!

0
FIFA மகளிர் உலகக் கோப்பை 2023.., டிக்கெட் விற்பனை எப்போது தெரியுமா? முழு விவரம் இதோ!!

பெண்கள் கால்பந்து உலக கோப்பை போட்டிக்கான டிக்கெட் விற்பனை அடுத்த மாதம் தொடங்க உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்று வெளியாகி உள்ளது.

உலகக் கோப்பை 2023

FIFA மகளிர் உலகக் கோப்பை 2023 ஆம் ஆண்டு நியூசிலாந்து மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது. இந்த உலக கோப்பை போட்டியில் நடப்பு சாம்பியனான அமெரிக்கா உட்பட 32 நாடுகள் பங்கேற்கின்றன. இந்த 32 நாடுகளுக்கு இடையில் மொத்தம் 64 போட்டிகள் அரங்கேற உள்ளது. இந்த போட்டிகள் நியூசிலாந்து மற்றும் அமெரிக்காவில் உள்ள 10 மைதானங்களில் நடைபெற உள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதனை தொடர்ந்து இறுதி ஆட்டம் அமெரிக்காவின் சிட்னியில் இருக்கும் மைதானத்தில் நடத்தபட உள்ளது. இந்நிலையில் இந்த போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை அடுத்த மாதம் 6 ஆம் தேதி தொடங்குகிறது. அதன்படி ஸ்பான்சர் கார்டு விசா வைத்திருப்பவர்களுக்கு அக்டோபர் 6 ஆம் தேதி முதல் 12 தேதி வரையும், மற்றவர்களுக்கு அக்டோபர் 13-21 வரையிலும் டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது.

அர்ஷ்தீப்-பின் மிரட்டல் பவுலிங் – நிலை குலைந்த தென்னாபிரிக்க டீம்! வெற்றி மாலை சூடிய இந்தியா!!

மேலும் இந்த டிக்கெட்கள் அனைத்தும் ஆன்லைன் வழியாக விற்பனை செய்யப்படுகிறதா? என்ற விபரம் பின்னர் வெளியாக உள்ளது. இந்த டிக்கெட்டின் விலை அமெரிக்க மதிப்பில் $13 US ஆகவும், இந்திய மதிப்பில் 1,064 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கால்பந்து ரசிகர்கள் உலக கோப்பை போட்டியை பார்க்க மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here