ஆஸ்திரேலியாவை வீழ்த்திய பிரான்ஸ்…, கோல் மழை பொழிந்து அசத்தல்!!

0
ஆஸ்திரேலியாவை வீழ்த்திய பிரான்ஸ்..., கோல் மழை பொழிந்து அசத்தல்!!
ஆஸ்திரேலியாவை வீழ்த்திய பிரான்ஸ்..., கோல் மழை பொழிந்து அசத்தல்!!

FIFA உலக கோப்பை தொடரில், ஆஸ்திரேலிய அணியை பிரான்ஸ் அணி 4-1 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

FIFA உலக கோப்பை:

FIFA உலக கோப்பை கால்பந்து தொடரின் முதல் லீக் சுற்றுகள் அனைத்தும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில், இன்று குரூப் Dயில் உள்ள பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இந்த போட்டியின், 9வது நிமிடத்திலேயே, ஆஸ்திரேலியாவின் கிரேக் குட்வின் கோல் ஒன்றை அடித்து அணியை முன்னிலை பெற செய்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த கோலுக்கு பிறகு பிரான்ஸ் வீரர்கள் தங்களது அதிரடியான தாக்குதலை தொடங்கினர். இதன் விளைவால், அட்ரியன் ராபியோட் மற்றும் ஆலிவர் ஜிரோட் 27 மற்றும் 32 ஆகிய நிமிடங்களில் கோல் அடித்து அசத்தினார். இதனால், ஆட்டத்தின் முதல் பாதியில், 2-1 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணி முன்னிலை பெற்றது. இதையடுத்து, தொடங்கப்பட்ட 2வது பாதியில் ஆலிவர் ஜிரோட் மற்றும் கைலியன் எம்பாப்பே இரண்டு கோல் அடிக்க, பிரான்ஸ் அணி 4-1 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

IND vs NZ ODI: தவான் தலைமையில் களமிறங்கும் இந்திய அணி…, அதிக வெற்றி வாய்ப்பு யாருக்கு?? முழு விவரம் உள்ளே!!

இதனால், குரூப் D யில் முதலிடத்தை அடைந்தது பிரான்ஸ் அணி. இதனை தொடர்ந்து, குரூப் F யில் மொராக்கோ மற்றும் குரோஷியா அணிகள் மோதின. யார் முதல் கோல் அடிப்பார் என பரபரப்பாக நகர்ந்த இந்த ஆட்டத்தில், எந்த அணியும் கோல் அடிக்காமல் போட்டியானது டிராவில் முடிந்தது. இதனால், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here