ஒரு கோலால் மாறிய ஆட்டம்…, அடுத்த சுற்றுக்கு முன்னேறி பிரேசில் அபாரம்!!

0
ஒரு கோலால் மாறிய ஆட்டம்..., அடுத்த சுற்றுக்கு முன்னேறி பிரேசில் அபாரம்!!
ஒரு கோலால் மாறிய ஆட்டம்..., அடுத்த சுற்றுக்கு முன்னேறி பிரேசில் அபாரம்!!

FIFA உலக கோப்பை தொடரில் சுவிட்சர்லாந்து அணியை வீழ்த்தி பிரேசில் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

FIFA உலக கோப்பை:

FIFA உலக கோப்பை தொடரில், குரூப் G இடம்பெற்றுள்ள பிரேசில் அணி சுவிட்சர்லாந்து அணிக்கு எதிராக மோதியது. இந்த இரு அணிகளும் முதல் போட்டியில் வெற்றி பெற்று தலா 3 புள்ளிகளை கைப்பற்றி இருந்தனர். இதனால், இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி ரவுண்ட் 16 க்கு எளிதில் முன்னேறி விடலாம் என்ற நிலை இருந்தது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதன் விளைவால், இரு அணிகளும், வெற்றிக்காக கடுமையாக போராடினார். இதில், பிரேசில் அணி தொடர்ந்து தாக்குதலை மேற்கொள்ள சுவிட்சர்லாந்து அணி வீரர்கள் அதனை தடுத்து மட்டுமே வந்தனர். இதனால், ஆட்டத்தின் முதல் பாதியானது கோலின்றி முடிந்தது. இதையடுத்து தொடங்கப்பட்ட 2வது பாதியில், பிரேசிலின் கேஸ்மிரோ 83 வது நிமிடத்தில் கோல் அடித்தார். இதனால், 1-0 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்தை வீழ்த்திய பிரேசில் அணி 6 புள்ளிகளுடன் ரவுண்ட் 16க்கு முன்னேறியது.

ஒரு புள்ளி வித்தியாசத்தில் வீழ்ந்த பெங்கால் வாரியர்ஸ்…,2 வது இடத்தை பிடித்து UP யோதாஸ் அணி அசத்தல்!!

இதனை தொடர்ந்து, இன்று காலை குரூப் H யில் உள்ள ரொனால்டோவின் போர்ச்சுகல் அணி உருகுவே அணிக்கு எதிராக விளையாடியது. இந்த போட்டியில், போர்ச்சுகல் வீரர் புருனோ பெர்னாண்டஸ் இரு கோல்களை அடிக்க, 2-0 என்ற கணக்கில் உருகுவே அணி வீழ்ந்தது. இதனால், போர்ச்சுகல் அணியும் 6 புள்ளிகளுடன் முன்னிலை பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here