FIDE உலக செஸ் சாம்பியன்ஷிப்: பிரான்ஸை வீழ்த்திய இந்தியா…, அரையிறுதிக்கு முன்னேறி அசத்தல்!!

0
FIDE உலக செஸ் சாம்பியன்ஷிப்: பிரான்ஸை வீழ்த்திய இந்தியா..., அரையிறுதிக்கு முன்னேறி அசத்தல்!!
FIDE உலக செஸ் சாம்பியன்ஷிப்: பிரான்ஸை வீழ்த்திய இந்தியா..., அரையிறுதிக்கு முன்னேறி அசத்தல்!!

FIDE உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில், இந்திய அணி வீரர்கள் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று பிரான்ஸை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறி உள்ளனர்.

FIDE உலக செஸ் சாம்பியன்ஷிப்:

இஸ்ரேல் ஜெருசலேமில் FIDE உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் கடந்த 19ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், 12 அணிகள் இரண்டு பிரிவுகளாக லீக் சுற்றுகள் போல் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில், விதித் எஸ் குஜராத்தி, நிஹால் சரின், எஸ் பி சேதுராமன் மற்றும் அபிஜீத் குப்தா உள்ளிட்டோரை கொண்ட இந்திய அணி கலந்து கொண்டு விளையாடி வருகின்றன.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த தொடரில், இந்திய அணி, இஸ்ரேல் மற்றும் போலந்து அணிகளுக்கு எதிராக டிரா செய்தது. இதனை தொடர்ந்து, 3 வது மற்றும் 4வது சுற்றில், அஜர்பைஜான் அணியை வென்றும், உஸ்பெகிஸ்தான் அணியிடம் தோல்வியையும் அடைந்திருந்தது. இதையடுத்து, 5 வது சுற்றில், 3.0-1.0 என்ற கணக்கில் அமெரிக்காவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.

தமிழ்நாடு அணி மீது விழுந்த விமர்சனம்…, பதிலடி கொடுத்த இந்திய வீரர்!!

இந்த காலிறுதியில், இந்திய அணி இன்று பிரான்ஸை எதிர்கொண்டது. இதில், இந்திய வீரர்களான விதித் எஸ் குஜராத்தி, நிஹால் சரின், எஸ் பி சேதுராமன் அமெரிக்க வீரர்களை வீழ்த்தியதன் மூலம் 3-1 என்ற இந்தியா வெற்றி பெற்றது. இதனால், இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது. இன்று இரவு நடைபெற இருக்கும் அரையிறுதியில் இந்தியா, உஸ்பெகிஸ்தானை எதிர்க்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here