திருச்செந்தூர் முருகன் கோவிலில் இந்த நேர்த்திக்கடன் செய்ய ரூ.5,000 செலுத்த வேண்டும்., மாவட்ட இணை ஆணையர் உத்தரவு!!!

0
திருச்செந்தூர் முருகன் கோவிலில் இந்த நேர்த்திக்கடன் செய்ய ரூ.5,000 செலுத்த வேண்டும்., மாவட்ட இணை ஆணையர் உத்தரவு!!!
திருச்செந்தூர் முருகன் கோவிலில் இந்த நேர்த்திக்கடன் செய்ய ரூ.5,000 செலுத்த வேண்டும்., மாவட்ட இணை ஆணையர் உத்தரவு!!!

தமிழகத்தில் புகழ்பெற்ற இந்து கோவில் ஸ்தலங்களில் முருகனின் அறுபடை வீடுகளுக்கும் தனிச்சிறப்பு உண்டு. அந்த வகையில் முருகனின் 2வது வீடான திருச்செந்தூர் கோவில் கடலோரத்தில் அமைந்துள்ளதால் இங்கு நடைபெறும் சிறப்பு பூஜைகளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். அதேபோல் காவடி, அலகு குத்துதல் உள்ளிட்ட பல்வேறு விதமான நேர்த்திக்கடன்களையும் செலுத்துவார்கள்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்நிலையில் நேர்த்திக்கடனாக பக்தர்கள் எவரும் சர்ப்பக் காவடி எடுக்க கூடாது என சமீபத்தில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார். இதைத்தொடர்ந்து திருச்செந்தூர் கோவிலில் சண்முகார்ச்சனை செய்வதற்கு கட்டணங்களை உயர்த்தி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1995ம் ஆண்டு முதல் பக்தர்கள் சண்முகார்ச்சனை செய்வதற்கு ரூ.1,500 செலுத்தி வந்தனர். இந்நிலையில் விலைவாசி உயர்வால் ரூ.5,000 என நிர்ணயம் செய்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்தது.

TNPSC Group 4 : 5,00,000 மாணவர்களுக்கு தேர்வு முடிவு வரவில்லை.., போலீசில் புகார்.., தேர்வாணையம் கொடுத்த விளக்கம்!!!

இதற்காக பக்தர்கள் எவரும் ஆட்சேபனை தெரிவிக்காததால் இன்று (மார்ச் 27) முதல் சண்முகார்ச்சனை செய்வதற்கு ரூ.5,000 என சட்டவிதிகளின் படி நிர்ணயிக்கப்பட்டுள்ளது என தூத்துக்குடி மண்டல இணை ஆணையர் கார்த்திக் தெரிவித்துள்ளார். எனவே இனி பக்தர்கள் சண்முகார்ச்சனை நேர்த்திக்கடன் செலுத்துவதற்கு புதிதாக மாற்றம் செய்யப்பட்டுள்ள ரூ.5,000 கட்டணத்தை செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here