பிப்ரவரி 14: அன்பை வெளிப்படுத்த தொடங்கியது காதல் வாரம்…, நாட்களுக்கான விவரங்கள் உள்ளே!!

0
பிப்ரவரி 14: அன்பை வெளிப்படுத்த தொடங்கியது காதல் வாரம்..., நாட்களுக்கான விவரங்கள் உள்ளே!!

பிப்ரவரி மாதம் என்றாலே அது, அன்புக்குரிய மாதமாக தான் கொண்டாடப்படுகிறது. இதில் குறிப்பாக, வருடந்தோறும் பிப்ரவரி 7 ஆம் தேதி முதல் பிப்ரவரி 14 ஆம் தேதி வரை காதல் வாரமாகவே உலகம் முழுவதும் உள்ள மக்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த வாரத்தின் ஒவ்வொரு நாளும் தனித்துவமான நாளாக கருதப்பட்டு காதலர்கள் தங்களது அன்பை வெளிக்காட்டி வருகின்றனர்.

அந்த வகையில்,

காதல் வாரத்தின் முதல் நாளான இன்று (பிப்ரவரி 7)- ரோஜா தினம் (Rose Day)

இந்நாளில் காதலர்கள், வாழ்க்கையில் ஒவ்வொருவரும் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் என்பதை சிவப்பு நிற ரோஜாக்கள் கொடுத்து தங்களது அன்பை பரிமாறிக் கொள்வார்கள்.

பிப்ரவரி 8 – முன்மொழிய நாள் (Propose Day)

காதலர்கள் தங்களது காதலை ஒருவருக்கொருவர் வெளிப்படையாக தெரிவித்துக் கொள்ளவர்.

பிப்ரவரி 9 – சாக்லேட் தினம் (Chocolate Day)

இத்தினத்தில், அன்பு, பக்தி மற்றும் மகிழ்ச்சி இவற்றின் அடையாளமாக இனிப்புகளை (சாக்லேட்) பரிசாக வழங்கி மகிழ்வர்.

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்.., இனி பணத்தை பாதியிலே எடுக்கலாம்.., வெளியான அறிவிப்பு!!!

பிப்ரவரி 10 – டெடி டே (Teddy Day)

அரவணைப்பு, கவனிப்பு மற்றும் பாசம் இவற்றின் குணங்களை கொண்டுள்ள டெடி பியர்களை காதலிக்கு காதலர்கள் பரிசாக கொடுத்து மகிழ்வர்.

பிப்ரவரி 11 – வாக்குறுதி நாள் (Promise Day)

வாழ்நாள் முழுவதும், அனைத்து விருப்பு வெறுப்புகளை ஏற்று ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்போம் என்று காதலர்கள் வாக்குறுதி அளிக்கும் நாள்.

பிப்ரவரி 12 – கட்டிப்பிடி நாள் (Hug Day)

பரிசு பொருட்களை தவிர்த்து ஒரு அன்பான அரவணைப்பு கொடுத்து ஆதரவு அளிக்கும் நாள்.

பிப்ரவரி 13 – முத்த நாள் (Kiss Day)

இந்த குறிப்பிட்ட நாளில் காதலர்கள் முத்தங்களை பகிர்ந்து கொண்டு வாழ்நாள் முழுவதும் பொக்கிஷமாக இருக்கும் நினைவாக இந்நாளை மாற்றிக் கொள்வார்கள்.

பிப்ரவரி 14 – காதலர் தினம் (Valentine’s Day)

இந்த காதலர் தினத்தில் நாள் முழுவதும் உங்களது துணையுடன் இருந்து முழு நாளையும் மகிழ்ச்சியாக கொண்டாடுவார்கள்.

Join Our WhatsApp  Channel ”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here