பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்.., பிப் 9 தேதி விடுமுறை.., பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!

0
பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்.., பிப் 9 தேதி விடுமுறை.., பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!
தமிழகம் மட்டுமல்லாமல் அனைத்து மாநிலங்களிலும் பொது தேர்வுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் இம்மாத இறுதியில் இருந்து 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு தொடங்க உள்ளது. இந்நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது புதுச்சேரி மாநிலத்தில் புகழ்பெற்ற கதிர் கதிர்காமம் முத்துமாரியம்மன் கோவில் செடல் திருவிழா பிப்ரவரி 9ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
இதனால் அந்த நாளில் புதுச்சேரி மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக புதுச்சேரி பள்ளி கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக பிப்ரவரி 24ஆம் தேதி அனைத்து பள்ளிகள் இயங்கும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here