23 ஆண்டுகள், 5 லட்சம் கிலோ மீட்டர் வரை பயணம்..  1997ல் தொலைந்து போன மகனை கண்டுபிடித்த பாசக்கார தந்தை!!

0

சீனாவில் 1997 இல் காணாமல் போன இரண்டு வயது மகனை 5 லட்சம் கிலோமீட்டர் பயணித்து 23 ஆண்டு கால தேடலுக்கு பிறகு அந்த மகனின் பாசக்கார கண்டுபிடித்துள்ளார்.

சீனாவில் குவோ கேங்டாங் என்ற நபரின் மகன் 1997 ஆம் ஆண்டு காணாமல் போயுள்ளார். அப்போது காணாமல் போன மகனுக்கு வயது 2. அவரது மகனை அவர்கள் வசித்த ஷாண்டோங் மாகாணத்தில் உள்ள ஒரு கொள்ளைக்கார கும்பல் கடத்தி விற்றுள்ளது. மகனை காணாமல் தவித்த தந்தை தன் மகனை எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டும் என்று தன் வீட்டை விட்டு புறப்பட்டுள்ளார்.

கிட்டத்தட்ட 23 ஆண்டுகள் தன் மகனை தேடி இரு சக்கர வாகனத்தில் 5 லட்சம் கிலோமீட்டர் பயணித்து உள்ளார். இவரை பற்றிய செய்தி சீனாவில் உள்ள அனைத்து ஊடகங்களிலும் வெளியிடப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து அவர் மகன் எங்கு இருக்கிறார் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தன்னுடைய மகனின் புகைப்படத்தை வைத்துக்கொண்டு, மகனை கண்டுபிடித்தையே லட்சியமாக வைத்து செய்த பயணத்தில் அந்த தந்தை தற்போது வெற்றி பெற்றுள்ளார். இந்த செய்தி தற்போது இணையத்தில் பரவி வருகிறது. பலரும் தங்களின் வாழ்த்துக்களை அந்த தந்தைக்கு கூறி வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here