விராட் கோலி, ரோஹித்தை பின்னுக்கு தள்ளிய அக்சர் படேல்…, T20 யின் சாதனை பட்டியலில் இணைந்து அசத்தல்!!

0
விராட் கோலி, ரோஹித்தை பின்னுக்கு தள்ளிய அக்சர் படேல்..., T20 யின் சாதனை பட்டியலில் இணைந்து அசத்தல்!!
விராட் கோலி, ரோஹித்தை பின்னுக்கு தள்ளிய அக்சர் படேல்..., T20 யின் சாதனை பட்டியலில் இணைந்து அசத்தல்!!

இலங்கை அணிக்கு எதிராக இந்திய அணியின் அக்சர் படேல் அதிரடியாக விளையாடியதன் மூலம், அதிவேக அரைசதம் அடித்தவர்களுக்கான பட்டியலில் இணைந்துள்ளார்.

அக்சர் படேல்:

இந்திய அணிக்கு எதிராக இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட திட்டமிட்டிருந்தது. இதன் படி, நடந்த 2 போட்டிகளில், இரு அணிகளும் தலா ஒரு வெற்றிகளை பெற்று சமநிலையில் உள்ளன. இந்த தொடரின் 3 வது மற்றும் கடைசி போட்டி நாளை ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

நாளை நடைபெற இருக்கும் இந்த போட்டியில் வெற்றி பெற்று அணி தொடரை கைப்பற்றும் என்பதால், இரு அணிகளும் தீவிரமாக பயிற்சி செய்து வருகின்றன. இந்நிலையில், சர்வதேச டி20 போட்டிகளில், அதிவேகமாக அரை சதம் கடந்த இந்திய வீரர்களுக்கான பட்டியல் வெளியாகி உள்ளது. இந்த பட்டியலில், இலங்கைக்கு எதிரான 2வது டி20 போட்டியில், 31 பந்தில் 65 ரன்களை அடித்த அக்சர் படேல் இணைந்துள்ளார்.

இந்த ஒரு விஷயத்தில் ஏபி டி வில்லியர்ஸ் தான் பெஸ்ட்…, இனி சூர்யகுமாரை இவருடன் ஒப்பிடாதிங்க…, இர்பான் பதான் பகீர் பேட்டி!!

இவர், இந்த போட்டியில், 20 பந்தில் அரைசதம் கடந்ததன் மூலம், இந்திய வீரர்களுக்கான பட்டியலில் 4 வது இடத்தை பிடித்துள்ளார். இதற்கு முன், யுவராஜ் சிங் 12 பந்தில் அரைசதம் அடித்து தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். இவரை தொடர்ந்து, கே எல் ராகுல் மற்றும் சூர்யகுமார் யாதவ் 18 பந்துகளிலும், கவுதம் கம்பீர் 19 பந்துகளிலும் அரைசதம் அடித்து டாப் ஆர்டரில் உள்ளனர். இதில், விராட் கோலி (21), ரோஹித் சர்மா (22) பந்துகளில் அரைசதம் அடித்த உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here