பாஸ்டேக் மின்னணு அட்டை..தேசிய நெடுஞ்சாலை ஆணையம் எச்சரிக்கை!!!!

0

தற்போது ஆன்லைன் வாயிலாக, பாஸ்டேக் அட்டைகள் வாங்க, பொதுமக்கள் பலர் பணம் கட்டி ஏமாந்து வருகின்றனர். இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

சுங்கச்சாவடிகளில் பணப்பரிமாற்றத்தை தவிர்க்க, இந்திய நெடுஞ்சாலைத் துறையால் கொண்டுவரப்பட்ட திட்டம் FASTag. சுங்கச் சாவடிகளில் வாகனங்கள் காத்திருக்கும் நேரத்தை குறைப்பது மற்றும் அதிகமான எரிபொருள் பயன்பாட்டை தவிர்ப்பதே இந்த திட்டத்தின் நோக்கம். இதற்கான பாஸ்டேக் அட்டைகளை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம், www.ihmcl.co.in என்ற இணையதளம் வாயிலாகவும், ‘my Fastag’ மொபைல் செயலி வாயிலாகவும் மக்களுக்கு வழங்கி வருகிறது.

இணைய வாயிலாக, பாஸ்டேக் அட்டைகள் பெற்றுக்கொள்ளலாம் என தற்போது பல்வேறு நிறுவனங்கள் விளம்பரம் செய்துவருகின்றனர். இதை நம்பி பலரும், ஆன்லைனில் பாஸ்டேக் அட்டைவாங்க, பணம் கட்டி ஏமாந்து வருகின்றனர். இது சம்மந்தமாக, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு புகார்கள் வந்துள்ளன. எனவே, ‘ஆன்லைன் வாயிலாக, யாரும் பணம் கட்டி ஏமாற வேண்டாம்’ என, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தற்போது நுகர்வோரை எச்சரித்துள்ளது.

இவ்வாறான புகார்கள் தொடர்பான விபரங்களை, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின், ‘1033’ என்ற எண்ணிக்கிற்கும் அல்லது http://[email protected]. என்ற, மின்னஞ்சல் முகவரியிலும் தெரிவிக்க ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here